»   »  ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் நாய்களைக் கொல்வோம்- ஆஸ்திரேலியா அதிரடி

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் நாய்களைக் கொல்வோம்- ஆஸ்திரேலியா அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்னி: பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் பாகம் 5 படத்தில் நடிப்பதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். தனது சொந்த விமானத்தில் ஆஸ்திரேலியா சென்ற இவர் சட்ட விரோதமாக தனது இரு நாய்களையும் உடன் கொண்டு சென்றுள்ளார்.

இதனைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியா அரசு இரு நாய்களையும் வரும் சனிக்கிழமைக்குள் நாட்டை விட்டு அனுப்பவேண்டும் என்று வேளாண் அமைச்சகம் மூலம் உத்தரவிட்டுள்ளது.

அப்படி செய்யவில்லை எனில் அவைகள் கொல்லப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஹாலிவுட் நாயகன் ஜானி டெப்

ஹாலிவுட் நாயகன் ஜானி டெப்

பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் 5ம் பாகத்தின் படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவிற்கு ஜானி டெப் சென்றுள்ளார். அப்போது தனது செல்ல நாய்களை அனுமதி பெறாமல் தமது சொந்த விமானத்தில் கொண்டு வந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அமைச்சரின் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அமைச்சரின் குற்றச்சாட்டு

ஜானி டெப், தமது சொந்த விமானத்தில் இரு யார்க்‌ஷைர் டெர்ரியர்ஸ் வகை நாய்களை ஆஸ்திரேலியாவின் அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்ததாக அந்நாட்டின் அமைச்சர் பார்னார்பி ஜாய்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சலூனுக்குப் போனதால வந்த வினை

சலூனுக்குப் போனதால வந்த வினை

இதுகுறித்து நடிகர் ஜானி டெப்பிடம் இருந்து எந்த விதமான மறுப்புகளும் அளிக்கப்படவில்லை. . ஜானி டெப் தனது இரு நாய்களையும் நாய்களுக்கான சலூனிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவை சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

நாலு நாளுக்குள்ள நாடு திரும்பனும்

நாலு நாளுக்குள்ள நாடு திரும்பனும்

இன்னும் 4 நாட்களுக்குள் நாய்களை அமெரிக்காவிற்குத் திரும்ப அனுப்பவேண்டும் அல்லது நாய்கள் கொல்லப்படும் என ஆஸ்திரேலிய வேளாண்மை அமைச்சகம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தற்போது சிக்கலில் உள்ளார் ஜானி டெப்.

அனுமதிக் கடிதம் எங்கப்பா

அனுமதிக் கடிதம் எங்கப்பா

ரேபிஸ் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டில் விலங்குகள் கொண்டுவருவதில் தகுந்த சான்றிதழ், அனுமதி கடிதம் பெறாமல் நாட்டிற்குள் கொண்டு வர இயலாது என்பதால் தற்போது ஜானி டெப் மீண்டும் அமெரிக்கா கிளம்பும் திட்டத்தில் இருக்கிறாராம்.

English summary
“Mr Depp has to either take his dogs back to California or we are going to have to euthanise them", said Joyce. "He’s now got about 50 hours left to remove the dogs.”
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil