»   »  அவதார் 2 ரிலீஸ் தேதி... அறிவித்தார் ஜேம்ஸ் கேமரூன்!

அவதார் 2 ரிலீஸ் தேதி... அறிவித்தார் ஜேம்ஸ் கேமரூன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: வசூலில் இன்று வரை உலகளவில் எந்தப் படமும் தொட முடியாத இடத்தில் உள்ள அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற உலகப் புகழ் பெற்ற படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வசூலைக் குவித்தது.

உலகத் திரைப்பட வரலாற்றில் எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்குக் கிடைத்தது.

ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன்

இந்தப் படத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்களை உருவாக்கும் முயற்சியிலிருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.

இரண்டாம் பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்ட ஜேம்ஸ் கேமரூன், அதன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளார்.

2017 கிறிஸ்துமஸ்

2017 கிறிஸ்துமஸ்

2017 கிறிஸ்துமஸ் தினத்தில் அவதார் 2 படத்தை எதிர்பார்க்கலாம் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.

மூன்று படங்கள்

மூன்று படங்கள்

கன்னடியன் என்டர்டெயின்மென்ட் கம்பெனியின் 'தி ஃபர்ஸ்ட் பிளைட்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரூன் இதனை அறிவித்தார். 2017-ல் இரண்டாம் பாகத்தையும், 2018-ம் ஆண்டு மூன்றாம் பாகத்தையும், 2019-ம் ஆண்டு நான்காம் பாகத்தையும் எதிர்ப்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தனித்தனி

தனித்தனி

ஒவ்வொரு படமும் தனித் தனி என்றாலும், அது ஒரு மிகப் பெரிய கதையைக் கொண்டது எனவும் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவதார் 2 பற்றிய செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

English summary
Avatar director James Cameron confirmed that his much expected Avatar 2 is reportedly hitting theaters at Christmas 2017, with the sequels opening in 2018 and 2019.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil