twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “அவதார் 3“ வேறுவிதமாக இருக்கும்..சஸ்பென்ஸை உடைத்த ஜேம்ஸ் கேமரூன்!

    |

    சென்னை : அவதார் 3 திரைப்படம் வேறுவிதமான கதைக்களத்துடன் இருக்கும் என்று ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

    2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16ந் தேதி திரையரங்கில் வெளியானது.

    160 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்துள்ளது.

    அசுர வேட்டையாடும் அவதார் 2...ரூ.8000 கோடி வசூல்...வியந்து போன திரையுலகம்!அசுர வேட்டையாடும் அவதார் 2...ரூ.8000 கோடி வசூல்...வியந்து போன திரையுலகம்!

    அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர்

    அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர்

    அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த விஷூவல் மயக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை. அவதார் இரண்டாம் பாகத்தில், நாவி இன மக்களின் தலைவனாக வாழ்ந்து வருகிறான் ஜேக் சல்லி. முதல் பாகத்தில் இராணுவத் தலைவனாக வந்த குவாட்ரிச், அவதாராக மாறி ஜேக் சல்லியை அழிக்க திட்டமிடுகிறான். இதை தெரிந்து கொண்ட ஜேக் சுலி குழந்தைகளை காப்பாற்ற மெட்கைனா இன மக்கள் வாழும் கடல் பகுதிகளுக்கு சென்று தஞ்சமடைகிறான்.

    மனம் கவர்ந்த கதை

    மனம் கவர்ந்த கதை

    கடல் பகுதியில் ஜேக் சுலி வாழ்ந்து வருவதை தெரிந்து கொண்ட குவாட்ரிச் அங்கு வாழும் மக்களையும் கடல் வளத்தையும் அழித்து அட்டகாசம் செய்கிறான். இதனால் நடக்கும் யுத்தத்தில ஜேக் சுலியின் மகன் இறந்துவிட, இறுதியில் கடுமையாக போராடி குவாட்ரிச்சை போராடி விரட்டி அடித்து மெட்கைனா இன மக்களின் மனதை கவர்ந்து அந்த இன மக்களில் ஜேக் சுலியின் குடும்பமும் ஒருவராகி விடுகிறார்கள்.

    அசுர வேட்டை

    அசுர வேட்டை

    13 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் ழுழுவதும் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களிலேயே மிக விரைவாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அவதார் 2.

    அவதார் 3

    அவதார் 3

    அவதார் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து 3, 4, 5 என அடுத்தடுத்த பாகங்களை எடுப்பேன் என் கூறியிருந்த ஜேம்ஸ் கேமரூன், அவதார் 3 படத்திற்கான பணியை தொடங்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், கிராபிஸ், சிஜி பணிகள் தொடங்கி உள்ளன. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 24ந் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவிதமான நாவி

    புதுவிதமான நாவி

    இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் அவதார் 3 படம் குறித்து பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். அதில், அவதார் மூன்றாம் பாகத்தின் கதை வேறுவிதமாக இருக்கும் புதுவிதமான நாவி இன மக்களை காட்ட உள்ளேன். இதுவரை, அவதார் கிரகத்துக்கு செல்லும் ஏலியன்களான மனிதர்களை மட்டுமே அவதார்களுக்கு பிரச்சனைகள் வந்தன.

    ஜேம்ஸ் கேமரூன்

    ஜேம்ஸ் கேமரூன்

    மூன்றாம் பாகத்தில் முதல் பாகத்தில் வனத்தில் வாழும் ஒமேட்டிகாயா இன மக்களையும், இரண்டாம் பாகத்தில் நீர்வாழ் நாவி இன மக்களையும் சுற்றி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாகத்தில நாவி மக்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லை என்பதை காட்டி உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Avatar Director James Cameron says, Avatar 3 is a different story
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X