»   »  22 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு வில்லன் மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்... சம்மர் ஸ்பெஷல்

22 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு வில்லன் மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்... சம்மர் ஸ்பெஷல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
22 சூப்பர் ஹீரோக்கள்...ஒரு வில்லன் | Avengers | Infinitywar

மார்வல் காமிக்ஸ்.... அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு.

ஒவ்வொரு அவேஞ்சர்ஸ் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ் , தெலுங்கு , இந்தி, ஆங்கிலம் ) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு ( தாநோஸ் ) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது.

Avengers 3rd Instalment from Summer 2018

படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் இந்தியாவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர் பட்டாளம் நடித்துள்ளது.

Avengers 3rd Instalment from Summer 2018

படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இடம் பெறும் தாநோஸ் கதாபாத்திரத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ரானா டகுபாதி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூசோ சகோதர்கள் - அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச்.

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) வெளியாகிறது.

Read more about: hollywood
English summary
The ‘AVENGERS’ has offered us the most enthralling experience of bringing superheroes together. In fact, the franchise has amplified its domain to the pinnacle of infinity with every installment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X