»   »  வசூலில்... உலக சாதனை படைத்த சூப்பர் ஹீரோக்கள் 'பேட்மேன் vs சூப்பர்மேன்'

வசூலில்... உலக சாதனை படைத்த சூப்பர் ஹீரோக்கள் 'பேட்மேன் vs சூப்பர்மேன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: கடந்த வாரம் வெளியான பேட்மேன் vs சூப்பர்மேன் திரைப்படம், வசூலில் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்து வருகிறது.

வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் இப்படம் சுமார் 420 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் பேட்மேனும், சூப்பர் மேனும் வசூலில் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

பேட்மேன் vs சூப்பர்மேன்

பேட்மேன் vs சூப்பர்மேன்

கடந்த 25 ம் தேதி பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் உலகம் முழுவதும் வெளியானது. பென் அஃப்லெக் பேட்மேனாகவும்,ஹென்றி கேவில் சூப்பர் மேனாகவும் இப்படத்தில் நடித்திருந்தனர். வில்லனின் சதியால் பேட்மேனை கொல்லும் கட்டாயத்திற்கு சூப்பர்மேன் தள்ளப்படுகிறான். இருவருக்கும் இடையேயான மோதலில் யார் வென்றது? வில்லனின் சதியை இருவரும் அறிந்து அதிலிருந்து மீண்டார்களா? என்பதே இப்படத்தின் கதை.

கடுமையான விமர்சனங்கள்

கடுமையான விமர்சனங்கள்

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் விமர்சகர்கள் இப்படத்திற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். எனினும் இப்படத்தின் வசூலானது விமர்சனங்களால் துளியும் பாதிக்கப்படவில்லை. 250 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியான 5 நாட்களில் 420 மில்லியன் டாலர்களைக் கடந்திருக்கிறது.

ஹாரிபாட்டருக்குப் பின்

ஹாரிபாட்டருக்குப் பின்

*மார்ச் மாதம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை பேட்மேன் vs சூப்பர்மேனுக்கு கிடைத்துள்ளது.

*இதுவரை வெளியான வார்னர் பிரதர்ஸ் படங்களில், ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் படத்திற்குப் பின் அதிக வசூலைக் குவித்த 2 வது படம்.

*வார்னர் பிரதர்ஸ் படங்களில் இப்படத்திற்கு மட்டுமே சீனாவில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருக்கிறது.

ஸ்டார் வார்ஸ், ஜுராசிக் பார்க்

ஸ்டார் வார்ஸ், ஜுராசிக் பார்க்

* அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த 7 வது திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

* உலகளவில் அதிகம் வசூல் செய்த 4 வது திரைப்படம் என்ற பெருமையும் பேட்மேன் vs சூப்பர்மேன் படத்திற்கு கிடைத்துள்ளது.

* ஸ்டார் வார்ஸ் 7, ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படங்களுக்குப் பின் அதிகம் வசூல் செய்த 3 வது ஐமேக்ஸ் படம், என்ற பெருமையையும் இப்படம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பான், ஜுபிடர் அசெண்டிங்

பான், ஜுபிடர் அசெண்டிங்

வார்னர் பிரதர்ஸ் தயாரித்த பான், ஜுபிடர் அசெண்டிங் படங்கள் வரிசையாகத் தோல்வியைத் தழுவிய நிலையில், அதற்கு மருந்தாக இப்படத்தின் வசூல் மாறியிருக்கிறது. ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பேட்மேன் vs சூப்பர்மேன் மேலும், பல உலக சாதனைகளைப் படைக்கும் என ஹாலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் பேட்மேன் vs சூப்பர்மேன் வசூல் ஹீரோக்கள்...

English summary
Batman v Superman: Dawn of Justice Worldwide Box Office Collection Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil