twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Batman-க்கு குரல் கொடுத்த கெவின் கான்ராய் புற்றுநோய் காரணமாக காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

    |

    வாஷிங்டன்: ஹாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட்டான பேட்மேனுக்கு பின்னணி குரல் கொடுத்து பிரபலமானவர் கெவின் கான்ராய்.

    பேட்மேன் அனிமேட்டட் சீரிஸ், Arkham வீடியோ கேம் தொடர்களில் பேட்மேனுக்கு குரல் கொடுத்துள்ள கான்ராய் காலமானார், அவருக்கு வயது 66.

    புற்றுநோய் காரணமாக உயிரிழந்த வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் கெவின் கான்ராய்க்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    அதகளம் செய்யும் ஜான் விக் 4 ட்ரெய்லர்… ஹாலிவுட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஆக்சன் ட்ரீட் அதகளம் செய்யும் ஜான் விக் 4 ட்ரெய்லர்… ஹாலிவுட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஆக்சன் ட்ரீட்

    வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்

    வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்

    நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட இன்னும் சிலரே ரசிகர்களால் அடையாளம் காணப்படுபவர்களில் முதன்மையானவர்கள். அவர்களை கடந்து இன்னும் பல திறமையான கலைஞர்கள் நிறைந்திருக்கும் மாய உலகமே சினிமா. இதில், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் பின்னணிக் குரல் கலைஞர்களும் முக்கியமானவர்கள். உதாரணமாக 90களில் வெள்ளிவிழா நாயகனாக கொண்டாடப்பட்ட மைக் மோகனுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் சுரேந்தர் என்ற கலைஞர். ஆனால், இப்போதும் ரசிகர்களுக்கு மோகனின் முகம் நினைவில் வந்தால், நிச்சயமாக அந்த சாந்தமான குரலை மறக்க முடியாது. அதுதான் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்களின் மிகப் பெரிய வெற்றி. அதேபோல், இன்று முன்னணியில் இருக்கும் நடிகர் விக்ரமும், அப்பாஸ், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?.

    ஹாலிவுட்டில் ஒரு பிரபலம்

    ஹாலிவுட்டில் ஒரு பிரபலம்

    இன்றைய நவீன உலகில் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்கள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், ஹாலிவுட்டில் கெவின் கான்ராய் என்ற வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அனிமேஷன் சீரிஸ்களில் ரொம்பவே புகழ்பெற்ற பேட்மேன் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பிரபலமானவர் கெவின் கான்ராய். Batman: The Animated Series, Arkham வீடியோ கேம் தொடர்களில் Batmanக்கு குரல் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் கெவின் கான்ராய். திரைக்கு பின்னால் இருந்து குரல் வழியே நடிப்பதில் கைதேர்ந்த கலைஞன் இந்த கெவின் கான்ராய்.

    புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பு

    புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பு

    ஹாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமான கெவின் கான்ராய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 1984ல் ஹேம்லெட்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கெவின் கான்ராய், புற்றுநோய் பாதிப்பால் தனது 66வது வயதில் காலமானார். டிசி அனிமேஷன் யுனிவர்ஸில் பல தயாரிப்புகளில் பேட்மேனின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் இன்று இல்லை என்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறிது காலமாக குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கெவின் கான்ராய், உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கெவின் கான்ராய்க்கு இரங்கல்

    கெவின் கான்ராய்க்கு இரங்கல்

    1955 நவம்பர் 30ம் தேதி அமெரிக்காவில் பிறந்த கெவின், 1984ல் ஹேம்லெட் என்ற பெயரில் தான் அவரது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 1992ல் தொடங்கிய Batman: The Animated Series அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை கொடுத்தது. தி அனிமேஷன் தொடருக்குப் பிறகு, பல DC திரைப்படங்களில் பேட்மேனுக்கு குரல் கொடுத்தார். டிசியின் தொடர் பாகங்களான பேட்மேன் அப்பால், ஜஸ்டிஸ் லீக், ஜஸ்டிஸ் லீக் அன்லிமிடெட் ஆகியவற்றில் நடிக்கவும் செய்தார். அதேபோல், ஆர்காம் தொடர் வீடியோ கேம்களுக்கும் அவர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கெவின் கான்ராய் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Batman is one of the most popular animated films among Hollywood fans. Kevin Conroy played the background voice of Bat Man in this film, died of cancer at the age of 66. Kevin Conroy's death has shocked fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X