twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபிளாஷ் படத்திற்காக மீண்டும் பேட்மேன் அவதாரம் எடுத்த பென் அஃப்லெக்.. இன்னொரு பேட்மேனும் இருக்காரு!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: சூப்பர் ஹீரோவான ஃபிளாஷ்-ஐ மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில், பென் அஃப்லெக் மற்றும் மைக்கேல் கீட்டன் மீண்டும் பேட்மேன் கதாபாத்திரங்களில் கலக்க உள்ளனர்.

    Recommended Video

    எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக மாஸ் பிரார்த்தனை.. எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமான வீடியோ!

    குழந்தைகள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்த ஒரு காமிக் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் தான் பேட்மேன்.

    இதுவரை பலர் இந்த ரோலில் நடித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மைக்கேல் கீட்டன், கிறிஸ்டியன் பேல் மற்றும் பென் அஃப்லெக் பேட்மேன் கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்கள் உலகளவில் வசூலை வாரி இரைத்தன.

    மணி ஹெய்ஸ்ட்.. மணிரத்னம் படங்கள்.. 'மாஸ்டர்' விஜய்யின் லாக்டவுன் எப்படியெல்லாம் போகுது தெரியுமா?மணி ஹெய்ஸ்ட்.. மணிரத்னம் படங்கள்.. 'மாஸ்டர்' விஜய்யின் லாக்டவுன் எப்படியெல்லாம் போகுது தெரியுமா?

    மைக்கேல் கீட்டன்

    மைக்கேல் கீட்டன்

    இயக்குநர் டிம் பர்டன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான பேட்மேன் படத்தில் வவ்வால் மனிதனாக பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் கீட்டன் நடித்திருந்தார். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் கதாபாத்திரங்களை போலவே பேட்மேன் கதாபாத்திரத்திற்கு உலகளவில் ரசிகர்கள் பெருகினர். எக்ஸ்ட்ரா பவர் ஏதும் இல்லாமல், தொழில்நுட்ப உதவியுடனே பேட்மேன் கதாபாத்திரம் எதிரிகளை வீழ்த்தும் திறன் கொண்டது. 1992ம் ஆண்டு வெளியான பேட்மேன் ரிட்டர்ன்ஸ் படத்திலும் அவரே பேட்மேனாக நடித்திருந்தார்.

    கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன்

    கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன்

    மாஸ்டர்பீஸ் படங்களை இயக்கி வரும் கிறிஸ்டோபர் நோலனிடம் கடந்த 2005ம் ஆண்டு பேட்மேன் படத்தை இயக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சூப்பர் ஹீரோ படத்தை கிறிஸ்டோபர் நோலன் எப்படி இயக்கப்போறாரு என பரிகாசம் செய்தவர்கள் வாய் பிளக்கும் அளவுக்கு கிறிஸ்டியன் பேலை வைத்து பேட்மேன் பிகின்ஸ் எனும் படத்தை இயக்கி அசத்தி இருந்தார்.

    கிறிஸ்டியன் பேல் vs ஹீத் லெட்ஜர்

    கிறிஸ்டியன் பேல் vs ஹீத் லெட்ஜர்

    கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் பிகின்ஸ் படம் அடித்த அதிரி புதிரி ஹிட்டை தொடர்ந்து மீண்டும், 2009ம் ஆண்டு வெளியான டார்க்நைட் படம் தான் இதுவரை வெளியான அனைத்து பேட்மேன் படங்களிலும் வேற லெவல் ரசிகர்களை ஈர்த்தது. அதற்கு காரணம் அதில், ஜோக்கராக நடித்த மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜர் தான். ஹீத் லெட்ஜருக்கும் கிறிஸ்டியன் பேலுக்கு நடிப்பில் அப்படியொரு போட்டி இருந்தாலும், ஹீத் லெட்ஜர் தான் அதில் வெற்றி பெற்றார் என்பதை கிறிஸ்டியன் பேலே ஒப்புக் கொள்வார்.

    பென் அஃப்லெக்

    பென் அஃப்லெக்

    டார்க் நைட் படத்தைத் தொடர்ந்து டார்க் நைட் ரைசஸ் படத்தையும் கிறிஸ்டியன் பேலை வைத்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கி இருந்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர், இயக்குநர் ஜாக் ஸ்னைடர் வசம் பேட்மேன் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2016ம் ஆண்டு அவர் இயக்கிய பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் படத்தில் பேட்மேனாக பிரபல நடிகர் பென் அஃப்லெக் பேட்மேன் அவதாரமெடுத்தார்.

    மார்வெலுக்கு போட்டியாக

    மார்வெலுக்கு போட்டியாக

    மார்வெல் அவெஞ்சர்ஸ்க்கு போட்டியாக டிசி காமிக்ஸின் ஜஸ்டிஸ் லீக் படத்திலும், பென் அஃப்லெக் தான் பேட்மேனாக நடித்து இருந்தார். 2017ம் ஆண்டு வெளியான அந்த படத்திலும் ப்ரூஸ் வெய்னே/ பேட்மேனாக பென் அஃப்லெக்ட் தனது மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    ஃபிளாஷ் படத்திற்காக

    ஃபிளாஷ் படத்திற்காக

    இந்நிலையில், தற்போது IT எனும் பேய் படத்தை இயக்கிய ஆண்ட்ரெஸ் முஸ்சிட்டி இயக்கத்தில் 2022ல் ரிலீசாகவுள்ள ஃபிளாஷ் எனும் சூப்பர் ஹீரோ படத்தில் மீண்டும் பேட்மேன் கதாபாத்திரத்தில் பென் அஃப்லெக் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளன. டபுள் ட்ரீட்டாக இந்த படத்தில் 1989ல் பேட்மேனாக நடித்த மைக்கேல் கீட்டனும் நடிக்கிறாராம்.

    கிறிஸ்டியன் பேல் ரசிகர்கள் அப்செட்

    கிறிஸ்டியன் பேல் ரசிகர்கள் அப்செட்

    பென் அஃப்லெக் ரசிகர்களுக்கு இந்த செய்தி சந்தோஷத்தை கொடுத்தாலும், பேட்மேன் பிகின்ஸ், டார்க் நைட், டார்க் நைட் ரைசஸ் உள்ளிட்ட மூன்று மெகா பிளாக்பஸ்டர் படங்களில் பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேலை ஏன் இந்த படத்தில் பேட்மேனாக நடிக்க வைக்கவில்லை என்ற அதிருப்தியை அவரது ரசிகர்கள் வெளிக்காட்டி வருகின்றனர்.

    இன்னொரு பேட்மேன்

    இன்னொரு பேட்மேன்

    இவர்கள் மட்டுமின்றி, இன்னொரு பிரபல நடிகரும் பேட்மேன் சூப்பர் ஹீரோ ரோலில் அசத்த உள்ளார். இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியாகவுள்ள 'தி பேட்மேன்' படத்தில் ட்விலைட், டெனெட் படங்களின் நாயகன் ராபர்ட் பேட்டின்ஸன் பேட்மேனாக நடித்து வருவது தனிக் கதை.

    English summary
    Ben Affleck return as Batman for the upcoming super hero movie FLASH. Michael Keaton who acted as a batman earlier also part in it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X