»   »  பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே?

பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஜேம்ஸ் பாண்ட் 2019ம் ஆண்டு உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார்.

தற்போது ஜேம்ஸ் பாண்டாக இருப்பது இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் டேனியல் கிரெய்க். அவர் 2006ம் ஆண்டில் இருந்து ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருகிறார்.

Bond 25 to hit screens in 2019

அவர் கெசினோ ராயல், குவான்டம் ஆஃப் சொலேஸ், ஸ்கைஃபால் மற்றும் ஸ்பெக்டர் ஆகிய பாண்ட் படங்களில் நடித்துள்ளார். டேனியல் கிரெய்கிற்கு மீண்டும் பாண்டாக நடிக்க இஷ்டம் இல்லை.

நான் மீண்டும் பாண்டாக நடிப்பதற்கு பதில் என் கை நரம்பை அறுத்துக் கொள்வேன். அப்படி நான் மீண்டும் பாண்டாக நடிக்க வந்தால் அது பணத்திற்காக மட்டுமே என பேட்டியளித்திருந்தார் கிரெய்க்.

இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் பிரான்சைஸின் 25வது படம் தயாராக உள்ளது. அதில் கிரெய்க் தான் பாண்டாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. படம் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.

பாண்ட் 25 படத்தை மைக்கேல் ஜி வில்சன் மற்றும் பார்பரா ப்ரொக்கோலி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

English summary
James Bond is all set to be back in november 2019. It is not clear whether Daniel Craig will be Bond or not.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X