கர்ப்பமான பிறகு 3வது திருமணத்துக்கு தயாரான பாடகி.. ஒரே நிர்வாண புகைப்படங்களாக போட்டுத் தாக்குறாரே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது 3வது திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்.

அமெரிக்க நடிகர் சாம் அஸ்காரியுடன் கடந்த ஆண்டு நிச்சயம் செய்து கொண்ட நிலையில், கர்ப்பமாக உள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

சமீபத்தில் தனது கர்ப்ப அறிவிப்பை அறிவித்த பிரிட்னி ஸ்பியர்ஸ் விரைவில் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பாப் உலகின் இளவரசி என அழைக்கப்பட்டு வரும் பிரபல பாடகி, பாடலாசிரியர், டான்ஸர் என பல பரிமாணங்களை கொண்டவர் பிரிட்னி ஸ்பியர்ஸ். 15 வயதில் இருந்தே பல இசை மேடைகளில் பாடி ரசிகர்களை கவர்ந்து வரும் பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு தற்போது 40 வயதாகிறது. பேபி ஒன் மோர் டைம், ஐ டிட் இட் அகைன் உள்ளிட்ட இவரது ஆல்பங்கள் உலகளவில் பிரபலமானவை.

3வது திருமணம்

3வது திருமணம்

கடந்த 2004ம் ஆண்டு ஜேசன் ஆலன் அலெக்ஸாண்டர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அந்த ஆண்டே அவரை விட்டு பிரிந்து கெவின் ஃபெடர்லைன் எனும் அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணமும் ரொம்ப வருஷம் நீடிக்கவில்லை. 2007ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ் இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சாம் அஸ்காரி என்பவரை காதலித்து கடந்த ஆண்டு நிச்சயம் செய்துக் கொண்டார்.

வயிற்றில் குழந்தை

வயிற்றில் குழந்தை

கெவின் ஃபெடர்லைன் உடன் இரு குழந்தைகளை பெற்று வளர்த்து வரும் பிரிட்னி ஸ்பியர்ஸ், தனது புதிய காதலரான சாம் அஸ்காரியுடன் கர்ப்பமான விஷயத்தை சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில், அவருடன் விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். சாம் அஸ்கரிக்கு 28 வயது தான் ஆகிறது.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

இந்நிலையில், தற்போது சாம் அஸ்காரி மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும், அந்த தேதியையும் குறித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், எந்த தேதி என்பதையும் எங்கே திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்பதையும் ரகசியமாக வைத்துள்ளனர். திருமண கவுன் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

நிர்வாண புகைப்படங்கள்

நிர்வாண புகைப்படங்கள்

3வது காதலரை திருமணம் செய்து கொள்ளப் போகும் நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நிர்வாண புகைப்படங்களை இவர் ஏன் பதிவிட்டு வருகிறார் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர். பிரிட்னி ஸ்பியர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 41 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X