»   »  3 வது முறையாக அமெரிக்காவைக் காப்பாற்றப் போகும் சூப்பர் ஹீரோ

3 வது முறையாக அமெரிக்காவைக் காப்பாற்றப் போகும் சூப்பர் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஹாலிவுட் படங்களில் ஒன்றான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹீரோ படங்களில் கேப்டன் அமெரிக்காவிற்கு ஒரு தனியிடம் உண்டு. கேப்டன் அமேரிக்கா தி பர்ஸ்ட் அவேன்ஜர், கேப்டன் அமேரிக்கா தி விண்டர் சோல்ஜர் படங்களைத் தொடர்ந்து இந்த வரிசையில் வெளியாகும் 3 வது படம் கேப்டன் அமேரிக்கா தி சிவில் வார்.

முதல் 2 பாகங்களும் வசூல் மழை பொழிந்த நிலையில் அடுத்த வருடம் 3 வது பாகமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் வெளியாகவிருக்கிறது.

கேப்டன் அமேரிக்கா தி பர்ஸ்ட் அவேன்ஜர்

கேப்டன் அமேரிக்கா தி பர்ஸ்ட் அவேன்ஜர்

2011 ல் வெளியான இப்படத்தில் கிரிஸ் எவான்ஸ், டொம்மி லீ ஜோன்ஸ் மற்றும் டொமினிக் கூபர் நடித்திருந்தனர். சுமார் 140 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 370 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.

கேப்டன் அமேரிக்கா தி விண்டர் சோல்ஜர்

கேப்டன் அமேரிக்கா தி விண்டர் சோல்ஜர்

கேப்டன் அமெரிக்காவின் 2 வது பாகமான இப்படம் கேப்டன் அமேரிக்கா எதற்கும் அஞ்சாதவன் என்ற பெயரில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது.

170 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்தது. சுமார் 714 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் முதல் பாகத்தை விட 1 மடங்கு அதிகமாக வசூலித்து இருந்தது.

கேப்டன் அமேரிக்கா தி சிவில் வார்

கேப்டன் அமேரிக்கா தி சிவில் வார்

இந்த வரிசையில் 3 வது படமாக உருவாகி வரும் கேப்டன் அமேரிக்கா தி சிவில் வார் அடுத்த வருடம் மே மாதம் 6 ம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. 3 வது முறையாக கேப்டன் அமெரிக்காவாக இப்படத்தில் நடிக்கிறார் கிரிஸ் எவான்ஸ். முதல் 2 பாகங்களிலும் வசூல் வேட்டையாடி இருப்பதால் இம்முறையும் வசூலில் இப்படம் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை கேப்டன் காப்பாரா?

அமெரிக்காவை கேப்டன் காப்பாரா?

நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் அதிரிபுதிரியான ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. வழக்கம் போல 2 முறை அமெரிக்காவை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்த கேப்டன், இம்முறையும் தனது பணியை செவ்வனே செய்து அமெரிக்காவை பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கொரு சந்தேகம் பூகம்பம், எரிமலை, சுனாமி எது வந்தாலும் அது எப்படி கரெக்டா அமெரிக்காவுல மட்டும் வருது?

English summary
Captain America: Civil War Trailer Released Yesterday, The Movie will be Released on May 6, 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil