Don't Miss!
- News
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் நடித்துள்ள நடிகை ஸாரா பைத்தியனுக்கு (Zara Phythian) 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸாரா பைத்தியனுக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி தண்டையையும் கொடுத்துள்ளது.
மார்வெல் பட நடிகை இப்படியொரு பாலியல் புகாரில் தண்டிக்கப்பட்டு இருப்பது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்
படத்தை
தயாரிக்க
தயார்...ஆனால்....போனி
கபூர்
சொன்ன
அந்த
விஷயம்

13 வயசு பிஞ்சை
13 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகை ஸாரா பைத்தியன் மீது குற்றம்சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டிங்காமில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

8 ஆண்டு சிறை
இந்த வழக்கில் நடிகை ஸாரா பைத்தியனுக்கு நீதிபதி அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளார். பண பலத்தால் இந்த வழக்கில் இருந்து எப்படியும் தப்பித்து விடலாம் என நினைத்த மார்வெல் பட நடிகைக்கு இப்படியொரு தண்டனை கிடைத்திருப்பதை ஹாலிவுட் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

கணவருக்கு 14 வருஷம்
சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்ய உடந்தையாக இருந்தது மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடிகை ஸாராவின் கணவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பலாத்கார வழக்கில் நடிகை ஸாராவின் கணவர் விக்டர் மார்க்கிற்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் ஷாக்
தொடர்ந்து ஹாலிவுட்டில் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பாலியல் ரீதியான தொல்லை வழக்குகளில் சிக்கி வந்த நிலையில், நடிகை ஒருவருக்கு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை கிடைத்திருப்பது ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.