twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த கண்ணாமூச்சி ஆட்டம்.. டெனெட் டிரைலர் ரிலீஸ்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் டிரைலர் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

    2000ம் ஆண்டு மெமென்டோ, 2010ல் இன்சப்ஷன், 2020ல் டெனெட் என அடுத்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ரெடியாகிவிட்டார் கிறிஸ்டோபர் நோலன்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெனெட் டிரைலர் வெளியாகியுள்ளது அடுத்த ஆண்டு இந்த படம் திரைக்கு வருகிறது.

     நான் ஒரு இந்தியர் என்பதை மதம் தீர்மானிக்கிறதா? இல்லவே இல்ல அடித்து சொல்லும் பிரபல நடிகை! நான் ஒரு இந்தியர் என்பதை மதம் தீர்மானிக்கிறதா? இல்லவே இல்ல அடித்து சொல்லும் பிரபல நடிகை!

    7 நாடுகள்

    7 நாடுகள்

    மும்பை, டென்மார்க், எஸ்தோனியா, இத்தாலி, நார்வே, லண்டன் மற்றும் அமெரிக்கா என மொத்தம் 7 நாடுகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளன. டிரைலரின் முதல் காட்சியே இந்தியாவில் உள்ள மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரிவர்ஸ் தியரி

    ரிவர்ஸ் தியரி

    மெமென்டோ படத்தில் ஷார்ட் டைம் மெமரி லாஸ் தியரியையும், இன்சப்ஷன் படத்தில் கனவு உலக தியரியையும் கொண்டு கண்ணாமூச்சி ஆடிய கிறிஸ்டோபர் நோலன் டெனெட் படத்தில் ரிவர்ஸ் தியரியை வைத்து கேம் ஆடியுள்ளார். டிரைலரின் ஒவ்வொரு நொடி காட்சியிலும் அது தெளிவாகத் தெரிகிறது.

    கிளைமேட் சேஞ்ச்

    கிளைமேட் சேஞ்ச்

    பூமி எரிந்து கொண்டிருக்கிறது என்பதை, நாயகனின் வீடு எரிந்து கொண்டிருப்பதாக ஆரம்பத்திலேயே மறைமுகமாக கிளைமேட் சேஞ்ச் குறித்த விஷயத்தையும் உள்ளடக்கி தனது ஸ்டைலில் இரு கான்செப்ட்களை ஒரு படமாகக் கொடுத்து அசத்தவுள்ளார் நோலன்.

    நடிகர்கள்

    நடிகர்கள்

    கிறிஸ்டோபர் நோலனின் 11வது படமான டெனெட் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ராபர்ட் பாடின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டிரைலர் எப்படி இருக்கு

    முன்கூட்டியே நடப்பதை அறிந்து கொள்ளும் நாயகன், அந்த சம்பவங்களை தடுக்க போராடுவது போன்ற கதையம்சத்துடன் டிரைலர் நகர்கிறது. ஆனால், இதுபோன்ற படங்கள் ஏற்கனவே ஹாலிவுட்டில் வந்துள்ள நிலையில், அதையும் தாண்டி, ரிவர்ஸில் இயங்கும் உலகம் மற்றும் இயல்பாக இயங்கும் நமது உலகம் என இரு உலகங்களுக்கு இடையே நாயகன் டிராவல் செய்யும் டைம் டிராவல் படமாகவும் இந்த படம் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

    எப்போ ரிலீஸ்

    எப்போ ரிலீஸ்

    கிறிஸ்டோபர் நோலனின் படத்தை முழுமையாக பார்த்தாலே அதன் கதை என்ன என்பதை யூகிப்பது என்பது சிக்கலான விஷயம் தான். சில நிமிட டிரைலரில் கணிப்பது என்பது உண்மையில் முடியாத ஒன்று என்றே சொல்லவேண்டும். கிறிஸ்டோபர் நோலனின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை அடுத்த அனடு ஜூலை மாதம் 17ம் தியேட்டர்களில் கண்டு வியப்போம்.

    English summary
    Christopher Nolan's international espionage has been the talk of the town since the announcement. And now, the first trailer of the film is out now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X