twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    9 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல காமெடி நடிகர் நார்ம் மெக் டொனால்ட் காலமானார்

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: நகைச்சுவை நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான நார்ம் மெக் டொனால்ட் காலமானார். அவருக்கு வயது 61.

    Saturday Night Live எனும் பிரபல நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோய் உடன் போராடி வந்த நிலையில், செப்டம்பர் 14ம் தேதி (நேற்று) காலமானார்.

    பில்லி மேடிசன், டர்ட்டி வொர்க், தி அனிமல், கிரோன் அப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபல ஹாலிவுட் திரைப்படமான டாக்டர் டு லிட்டில் படத்தின் மூன்று பாகங்களிலும் லக்கி எனும் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருப்பார் நார்ம் மெக் டொனால்ட்.

    இறந்து போன அப்பாவின் பிறந்த நாள்.. ஐ லவ் யூ டாடி என உருக்கமாக வாழ்த்து கூறிய பிரபல நடிகரின் மகள்! இறந்து போன அப்பாவின் பிறந்த நாள்.. ஐ லவ் யூ டாடி என உருக்கமாக வாழ்த்து கூறிய பிரபல நடிகரின் மகள்!

    9 ஆண்டுகள் போராட்டம்

    9 ஆண்டுகள் போராட்டம்

    சுமார் 9 ஆண்டுகள் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தாலும் தனது உடல் நலம் குறித்த விஷயங்களை மிகவும் ரகசியமாகவே பாதுகாத்து வந்துள்ளார் நடிகர் நார்ம் மெக் டொனால்ட் அவரது மறைவு ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல காமெடி ஷோ

    பிரபல காமெடி ஷோ

    1993 முதல் 1998 வரை NBC தொலைக்காட்சியின் Saturday Night Live நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்த நார்ம் மெக் டொனால்ட் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்த செய்தியை அறிந்த பல ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ஸ்டண்ட் அப் காமெடியன்

    ஸ்டண்ட் அப் காமெடியன்

    கனடாவில் உள்ள க்யூபெக் நகரத்தில் 1959ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பிறந்த நடிகர் டொனால்ட் ஏகப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள், டிவி தொடர்கள் மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் என தனது வாழ்நாள் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

    சொந்த ஷோ

    சொந்த ஷோ

    SNL நிகழ்ச்சியில் இருந்து 1998ம் ஆண்டு வெளியேறிய இவர் தனது பெயரான நார்ம் எனும் பெயரிலேயே தனியாக காமெடி நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்தார். 1999 முதல் 2001ம் ஆண்டு வரை அந்த ஷோவை நடத்திய இவர் அதன் பிறகு டிவி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்க ஆரம்பித்தார். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் கடந்த 2010 முதல் 2018 வரை ஒளிபரப்பாகி வரும் கேர்ள் பாஸ் தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

    டாப் 100

    டாப் 100

    2004ம் ஆண்டு காமெடி சென்ட்ரல் வெளியிட்ட உலகின் சிறந்த 100 காமெடியன்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு வெளியான Klaus எனும் அனிமேஷன் திரைப்படத்திற்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். நடிகர் நார்ம் மெக் டொனால்ட் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்த செய்தியை அவரது நண்பர் லோரி ஜோ ஹோக்ஸ்ட்ரோ அறிவித்த நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் இரங்கலை இந்த தலை சிறந்த காமெடி நடிகருக்கு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Saturday Night Live fame comedy actor Norm Mc Donald passes away after struggling 9 years of Cancer. Hollywood Celebrities and fans mourn for his great loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X