»   »  டேனியல் கிரே ஓய்வு பெறுகிறார்.. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் டேமியன் லூயிஸ்?

டேனியல் கிரே ஓய்வு பெறுகிறார்.. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் டேமியன் லூயிஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜேம்ஸ்பாண்ட் பட தொடர்களின் இப்போதைய நாயகனான டேனியல் க்ரெய்க் ஸ்பெக்டர் படத்தோடு ஓய்வு பெறுகிறார். அடுத்த ஜேம்ஸ்பாண்ட் அவதாரமெடுக்கிறார் டேமியன் லூயிஸ்.

19-ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல நடிகர்களின் வித்தியாசமான நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உயிர்ப்புடன் திகழ்கிறது.

பாண்ட் படங்கள் என்றாலே அதிரடியான சாகசங்களுடன் கூட ஆக்ஷன் திரைப்படங்கள் என மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

ஜேம்ஸ்பாண்ட் தொடர்களின் நாயகர்கள் வேறுபட்டாலும் ஜேம்ஸ்பாண்டின் இயல்பு ஒரே மாதிரிதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரர் இங்கிலாந்தை சேர்ந்த 'இயான் பிளமிங்'.

சீன் கானரி

சீன் கானரி

முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி 'டாக்டர் நோ' படத்தில் தத்ரூபமான உளவாளியாக நடித்து மக்கள் மனங்களில் இடம் பெற்றார்.1962-ம் ஆண்டு தொடங்கி 1971-ம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்களில் இவர்தான் கதாநாயகன்.

ரோஜர் மூர்

ரோஜர் மூர்

இவருக்குப் பின் டேவிட் நிவென் ஒரு படத்தில் மட்டும் ஜேம்ஸ் பாண்டாக வந்தார். ஜார்ஜ் லாசன்பை அடுத்த படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடித்தார்.

அடுத்து ஜேம்ஸ்பாண்டான ரோஜர் மூர் ஏழு படங்கள் நடித்துக் கலக்கினார். டிமேதி டால்டன் இரு படங்களில் ஜேம்ஸ்பாண்டாக வந்தார்.

பிராஸ்னன்

பிராஸ்னன்

ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்தவர்களிலேயே மிகவும் வசீகரமானவர், ஏராளமானவர்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம்பிடித்தவர் என்றால் அது பியர்ஸ் பிராஸ்னன்தான். ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்காகவே அவதாரமெடுத்தவர் போல வந்து கோல்டன் ஐ, டே ஆப்டர் டுமாரோ, தி வேர்ல்ட் ஈஸ் நாட் எனஃப், டை அனதர் டே படங்களில் கலக்கினார். ஐந்தாவதாக ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் ஓய்வை அறிவித்தார்.

இப்போதைய பாண்ட்

இப்போதைய பாண்ட்

இப்போதுள்ள ஜேம்ஸ்பாண்ட் டேனியல் க்ரெய்க் 2005-ம் ஆண்டு ராயல் கேஸினோ மூலம் அறிமுகமானார். தொடர்ந்து குவாண்டம் ஆப் சோலேஸ் மற்றும் ஸ்கைபாலில் நடித்தார். இவர் நடித்த ஸ்கை பால் திரைப்படமே அதிகமான வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது. ஸ்கை பால் திரைப்படம் 1.257 பில்லியன் டாலர் பொருட் செலவில் உருவாக்கப்பட்டது. சாம் மெண்டீஸ் இயக்கிய இந்தப் படம் 5.9484 பில்லியன் டாலர் வசூல் குவித்தது. இதுவே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அதிகபட்ச வசூலாகும்.

தற்போது இவர் நடித்து வரும் ஸ்பெக்டர் படம்தான், இவரது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படமாகும்.

புதிய பாண்ட்

புதிய பாண்ட்

டேனியல் கிரெக்கை அடுத்து டேமியன் லூயிஸ் புதிய ஜேம்ஸ் பாண்ட்டாக உருவாகிறார். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். ஏடனில் கல்வி பயின்றவர் தற்போது உல்ப் ஹால் என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். இவர்தான் புதிய பாண்ட் என்று படத்தின் தயாரிப்பாளரான இயான் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் மீடியாக்கள் உறுதி செய்து வெளியிட்டதால், டேமியன் லூயிஸ் பெயரை வைத்து பெரிய சூதாட்டமே நடத்தி வருகிறார்கள்.

இதுவரை

இதுவரை

டாக்டர் நோ தொடங்கி ஸ்கை பால் வரை மொத்தம் 23 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் வரவிருக்கும் ஸ்பெக்டர் 24 வது பாண்ட் படமாகும்.

English summary
Damian Lewis is reportedly one of the favorites to succeed Daniel Craig in the role of James Bond, at least according to UK bookies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil