ஜேம்ஸ் பாண்ட்டாக கடைசி முறை சிவப்புக் கம்பளத்தில் நடந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் க்ரேக்!
லண்டன்: நோ டைம் டூ டை படத்தின் பிரீமியரை முன்னிட்டு நடிகர் டேனியல் க்ரேக் ஜேம்ஸ் பாண்ட்டாக கடைசியாக சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்றார்.
பிரிட்டிஷ் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
1953ஆம் ஆண்டு லான் ஃபிளமிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸ்கள்
முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி Dr. No திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி இதுவரை ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸின் 25 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

நோ டைம் டூ டை
25வது படமாக நோ டைம் டூ டை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். நோ டைம் டூ டை படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் க்ரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கடைசி 5 படங்களான கேஸினோ ராயலே, குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்டர் ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் டேனியல் க்ரேக் தான் நடித்துள்ளார்.

சிவப்புக் கம்பள வரவேற்பு
இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் டேனியல் க்ரேக் கடைசியாக நடித்துள்ள படம்தான் நோ டைம் டூ டை. இந்தப் படம் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு ஜேம்ஸ் பாண்ட்டாக கடைசியாக சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்றார் நடிகர் டேனியல் க்ரேக்.

இந்தியாவில் செப்.30 ல் ரிலீஸ்
டேனியல் க்ரேக் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நோ டைம் டூ டை திரைப்படம் வரும் 30 ஆம் தேதி பிரிட்டனிலும், அக்டோபர் 8ஆம் தேதி அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி நோ டைம் டூ டை படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

கொரோனாவால் தள்ளிப்போன ரிலீஸ்
நோ டைம் டூ டை படத்தில் ராமி மாலேக், லீ செய்டக்ஸ், லாஷனா லின்ச், பென் விஷா, நோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











