»   »  ரொம்பப் பிரமாதம்யா... உலகத்திலேயே மிகப் பெரிய குடிகார "பான்டு" இவர்தாம்யா!

ரொம்பப் பிரமாதம்யா... உலகத்திலேயே மிகப் பெரிய குடிகார "பான்டு" இவர்தாம்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர்களிலேயே மிகப் பெரிய குடிகார பாண்ட் டேணியல் கிரேக் நடித்த படங்களில் இடம் பெற்ற பாண்ட்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒரு படத்துக்கு சராசரியாக 20 யூனிட் மது அருந்துகிறாராம். இதற்கு முன்பு வந்த படங்களில் பாண்ட் நடிகர்கள் இந்த அளவுக்கு மது அருந்தியதில்லையாம். இதனால் குடிகார பாண்ட் என்ற பெயர் டேணிக்குக் கிடைத்துள்ளது.

பாண்ட் என்றாலே குடியும் கூத்தும்தான் என்பது பிரீகேஜி பசங்களுக்குக் கூடத் தெரியும்தான். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத குடிகாரராக தற்போதைய பாண்ட் இருக்கிறாராம்.

ஸ்பெக்டர்

ஸ்பெக்டர்

குறிப்பாக தற்போது வெளியாகவுள்ள ஸ்பெக்டர் படத்தில் குண்டக்க மண்டக்க குடித்துத் தள்ளியுள்ளாராம் பாண்ட். இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் குடி காட்சிகள் அதிகம் இருக்குமாம்.

பியர்ஸ், சீன் எல்லாம் பிச்சை வாங்கனும்

பியர்ஸ், சீன் எல்லாம் பிச்சை வாங்கனும்

பியர்ஸ் பிராஸ்னன் சராசரியாக ஒரு படத்துக்கு 12 யூனிட் மதுதான் அருந்தியுள்ளாராம். சீன் கானரி, ரோஜர் மூர் ஆகியோர் தலா 11 யூனிட்தான். ஆனால் அவர்களை மிஞ்சி விட்டார் டேணியல் கிரேக்.

ஒரே ஒரு குருக்கள்

ஒரே ஒரு குருக்கள்

ஜார்ஜ் லேஸன்பி - அட இவரும் பாண்ட் வேடத்தில் நடித்தவர்தான் - ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த இவர் தான் நடித்த ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரெட் சர்வீஸ் படத்தில் முக்கி முக்கி 9 யூனிட் மது அருந்தி நடித்தார்.

டால்டனுக்கு நாலரை

டால்டனுக்கு நாலரை

டிம்மோத்தி டால்டன் சராசரியாக 4.5 யூனிட் மது அருந்தி நடித்துள்ளார். இவர்கள் எல்லாம் சின்னப் பசங்க ரேஞ்சுக்கு கொஞ்சூண்டு குடித்தவர்கள்.

உலகப் பெரும் குடிகாரர்

உலகப் பெரும் குடிகாரர்

டேணியல் கிரேக்தான் எல்லா வகையிலும் மிகப் பெரிய குடிகார பாண்ட் ஆவார். படத்துக்குப் படம் இவர் குடிக்கும் காட்சிகள் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றன. குளிக்கிறாரோ இல்லையோ நன்றாக குடிக்கிறாராம் இவர்.

2006 முதல்

2006 முதல்

2006ல் முதல் முறையாக கேஸினோ ராயல் படத்தில் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார் கிரேக். இன்று வரை அவரது ராஜ்ஜியம்தான் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

சியர்ஸ் மச்சி.. நீ சிலம்பு மச்சி!

English summary
Actor Daniel Craig has been revealed as the booziest ever James Bond, after drinking 20 units of alcohol per movie. Ian Fleming's secret agent has always enjoyed his drinks, but according to a new study, the "Skyfall" star's version of 007 consumes far more alcohol than his predecessors, reported Daily Mirror.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil