twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டி காப்ரியோவுடன் - ஷாரூக்: 'கூட்டணி'யில் குழப்பம்!!

    By Shankar
    |

    shahrukh khan with Leonardo
    டைட்டானிக் நாயகன் லியனார்டோ காப்ரியோவுடன் இணைந்து ஷாருக்கான் எக்ஸ்ட்ரீம் சிட்டி என்ற படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்காக ஷாரூக், டி காப்ரியோ மற்றும் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸீஸ் ஆகியோர் நேரில் சந்தித்தும் பேசினர்.

    ஆனால் இப்போது இந்த படம் உருவாகுமா... அப்படியே எடுக்கப்பட்டாலும் அதில் டி காப்ரியோ நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தக் கதையை ஷாரூக்தான் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸீஸிடம் கூறினாராம். ஷாரூக் கடத்தல் மன்னனாகவும், லியனார்டோ காப்ரியோ போலீஸாகவும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தனர்.

    90களில் சோமாலியாவில் அமைதிப் படையில் பணிபுரிகிறார்கள் இந்தியரான ஷாருக்கும் அமெரிக்கரான லியனார்டோவும். ஒருமுறை ஷாருக்கின் மனைவியின் உயிரைக் காப்பாற்றுகிறார் லியனார்டோ. பின்னர் லியனார்டோவும் ஷாருக்கும் அவரவர் நாடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

    லியனார்டோ அமெரிக்காவில் போலீஸ்காரராக வேலை செய்ய, ஷாருக் இந்தியாவில் கடத்தல் செய்யும் தாதாவாக உருவாகிறார். பல வருடங்கள் கழித்து, குடும்ப சூழல் காரணமாக இந்தியாவில் இருக்கும் தன் நண்பனிடம் உதவி கேட்க வருகிறார் லியனார்டோ.

    தன் மனைவியின் உயிரைக் காபாற்றிய நண்பனாக இருந்தாலும், தன் தொழிலுக்கு எதிரியான லியனார்டோவை ஷாருக் எப்படி கையாள்கிறார் என்பதே கதை. பழைய நண்பர்கள் இருவருக்குமிடையே நடக்கும் போராட்டம்தான் இந்தப் படத்தின் ஹைலைட்.

    இப்படத்தின் திரைக்கதையை முஷ்டாக் ஷேக் எழுத, பால் ஷ்ரேடர் இயக்குகிறார்.

    உலகப் புகழ் பெற்ற இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸீஸ் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

    டி காப்ரியோ விலகல்?

    இப்போது இந்தக் கதையில் டி காப்ரியோ நடிக்கமாட்டார் என்று நியூயார்க்கில் உள்ள அவரது ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர்.

    படம் துவங்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், அதற்குள் டி காப்ரியோவை சம்மதிக்க வைத்துவிட முடியும் என நம்புவதாக படத்தின் எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Leonardo DiCaprio isn’t going to team up, as suggested by writer Mushtaq Sheikh, with shahrukh khan in Xtreme City. Even as the Indian media is going ballistic over the Hollywood star’s role of a New York cop in the movie, his New York-based publicists insists the reports are 'not true.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X