»   »  ஹாலிவுட் படத்தில் தீபிகாவின் பெயர் என்ன, அவரது லுக் எப்படி இருக்கும்?

ஹாலிவுட் படத்தில் தீபிகாவின் பெயர் என்ன, அவரது லுக் எப்படி இருக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் வின் டீசல் தான் தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து xXx படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை தீபிகா படுகோனே வின் டீசல் நடிக்கும் ஹாலிவுட் படமான xXxல் நடிக்கிறார். இதற்காக அவர் நேற்று அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றார். இந்நிலையில் படப்பிடிப்பின் முதல் நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வின் டீசல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Deepika Padukone’s xXx look: Vin Diesel shares first day shooting pics

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

படப்பிடிப்பின் முதல் நாள்...சான்டர் மற்றும் செரினா(தீபிகா)...அன்புக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தில் அவர் தீபிகாவை அணைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். தீபிகா நடிக்கம் முதல் ஹாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட் லீ, சாமுயல் எல் ஜாக்சன், நினா டோப்ரேவ், டோனி ஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும்.

English summary
Action star Vin Diesel shared the first picture of him and Deepika Padukone shooting for their much awaited film “xXx: The Return of Xander Cage”. Diesel, 48, took to Instagram to share Deepika’s look in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil