Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜானி டெப்புக்கு கிடைத்தது வெற்றி.. முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுக்கு கிடைத்தது என்ன தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் நடித்து உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப்.
Recommended Video
ஜானி டெப்புக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் இடையே கடந்த 2018ல் இருந்து மான நஷ்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் கேவலமான காரணங்களை அடுக்கி குற்றம் சுமத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் அதிரடியாக அதிகபட்சமாக ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்து இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
அந்த
இடத்தில்
மதுபாட்டிலை
திணித்தார்..
ஜானி
டெப்
மோசமாக
பாலியல்
கொடுமை
கொடுத்ததாக
மாஜி
மனைவி
புகார்

கேப்டன் ஜேக்ஸ்பேரோ
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜேக்ஸ்பேரோவாக நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் ஜானி டெப். ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் என ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். 58 வயதாகும் ஜானி டெப் கடந்த சில ஆண்டுகளாக மான நஷ்ட வழக்கு ஒன்றை சந்தித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.

ஆக்வாமென் ஹீரோயின்
1983ம் ஆண்டு லோரி ஆனி ஆனிசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜானி டெப் அவரை 1985ம் ஆண்டே விவாகரத்து செய்தார். பின்னர், ஆக்வாமென் பட நடிகையான ஆம்பர் ஹெர்டை 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜானி டெப் 2017ம் ஆண்டு முன்பை போலவே இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

மனைவி மீது வழக்கு
கடந்த 2018ம் ஆண்டு தனது இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது நடிகர் ஜானி டெப் 50 மில்லியன் டாலர் கேட்டு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். 'காமவெறிப் பிடித்தவன்' (abuser) என வாஷிங்டன் போஸ்ட்டுக்கு ஆம்பர் ஹெர்ட் கொடுத்த பேட்டி தான் இந்த வழக்கை ஜானி டெப் தொடர காரணமாக அமைந்தது.

பழிக்குப் பழி
உடனடியாக ஜானி டெப் மீது 100 மில்லியன் டாலர் கேட்டு அதே நீதிமன்றத்தில் ஆம்பர் ஹெர்டும் வழக்கு தொடர்ந்தார். ஜானி டெப் தனது அந்தரங்க உறுப்பிலேயே மது பாட்டிலை சொறுகினார் என்கிற அளவுக்கு படு மோசமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். ஆம்பர் ஹெர்ட் தனது விரலை வெட்டினார் என ஜானி டெப்பும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

ஜானி டெப்புக்கு வெற்றி
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு வழியாக 4 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு வெளியாகி உள்ளது. இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், இருவர் மீதும் குற்றம் இருப்பதாக பார்த்த நீதிமன்றம், அதிகபட்சமாக ஆம்பர் ஹெர்ட் பக்கம் தான் குற்றம் இருப்பதாகக் கூறி அவருக்கு 15 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆம்பர் ஹெர்டுக்கு கிடைத்தது என்ன
ஜானி டெப் ஆம்பர் ஹெர்டுக்கு 2 மில்லியன் டாலர் தர வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 15-2 என்றால் 13 மில்லியன் டாலர் இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு கிடைத்திருப்பதை அறிந்ததும், தனது வாழ்க்கையை மீண்டும் திருப்பிக் கொடுத்த நீதிமன்றத்துக்கு நன்றி எனக் கூறி சந்தோஷப்பட்டுள்ளார். இந்த வழக்கு காரணமாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் ஜானி டெப்.

பெண்ணுக்கு நியாயம் கிடைக்கல
ஆண்கள் பெண்கள் மீது நடத்தும் தாக்குதலுக்கு எதிராக போராடிய எனக்கு கடைசியில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை என நடிகை ஆம்பர் ஹெர்ட் தனது மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை தான் சும்மா விட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.