Just In
Don't Miss!
- News
பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா? தனித்துப் போட்டியா?
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தி கிரே மேன்... தனுஷ் இந்த வேடத்தில் தான் நடிக்கிறாரா... ரகசியத்தை உடைத்த மார்க் கிரேனி
நியூயார்க் : நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றார் தனுஷ்.
அமெரிக்காவில் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் தான் தனுஷ் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே 'எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

ஆன்டனி, ஜோ ருஸ்ஸோ இயக்கும் தி கிரே மேன் படம், மார்க் கிரேனி எழுதிய ஆக்ஷன், திரில்லர் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படம் பற்றி மார்க் கிரேனி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த படத்தில் தனுஷ் நடிப்பது பற்றி ஆச்சரியம் தெரிவித்த அவர், இதில் தனுஷ் நடிக்கும் வேடம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோருடன் தனுஷ் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டம் ஒன்றின் தலைவனாக தான் தனுஷ் நடிக்க போகிறார். முன்னாள் சிஐஏ அதிகாரி வேடத்தில் ரியான் கோஸ்லிங் நடிக்க உள்ளார்.
தனுஷ் பற்றி பேசிய மார்க் கிரேனி பேசுகையில், என்னை கவர்ந்த தென்னிந்திய நடிகர் தனுஷ். அவரடன் பழகியது கிடையாது. இந்த படத்தில் அவர் கொலையாளிகளின் தலைவர் வேடத்தில் தான் நடிப்பார் என நினைக்கிறேன்.
ட்விட்டரில் என்னை 6000 பேர் பின் தொடர்கிறாரகள். அதில் எந்த ஸ்பெஷலும் இல்லை. ஆனால் இந்திய நடிகரான தனுஷ் என்னை பின்தொடர்வது தான் பெரிய விஷயம். அவரை 9.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அது மிகப் பெரிய விஷயம் என்றார்.