twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்காக பாரம்பரியத்தை உடைத்தாரா எலிசபெத் ராணி

    |

    லண்டன் : பிரம்மாண்டமாக எத்தனை ஹாலிவுட் படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே உலகம் முழுவதும் உண்டு. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இவற்றில் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் இதுவரை பல நடிகர்கள் நடித்து விட்டனர்.

    25 வது ஜேம்ஸ் பாண்ட் படமாக சமீபத்தில் வெளியானது படம் No Time to Die. இதில் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் (Daniel Craig) நடித்திருந்தார். இந்த படத்தில் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரை ஏற்று நடித்தார் டேனியல். ஆனால் இனி தான் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என சமீபத்தில் டேனியல் அறிவித்தார்.

    தந்தை தயாரிப்பில் இணையும் பிரபல நடிகர்... ஆர்ப்பாட்டமான பர்ஸ்ட் லுக் வெளியீடு தந்தை தயாரிப்பில் இணையும் பிரபல நடிகர்... ஆர்ப்பாட்டமான பர்ஸ்ட் லுக் வெளியீடு

    சிஎம்ஜி கெளரவம்

    சிஎம்ஜி கெளரவம்

    இந்நிலையில் கடந்த வாரம் இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் நடைபெற்ற புத்தாண்டு விருது விழாவில் டேனியலுக்கு சிஎம்ஜி கெளரவம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பொதுவாக இங்கிலாந்து நாட்டில் சிஎம்ஜி வைத்திருப்பவர்கள் மன்னரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் என கருதப்படுவர்.

    யாருக்கு கொடுப்பார்கள்

    யாருக்கு கொடுப்பார்கள்

    சிஎம்ஜி என்பது நிஜ வாழ்க்கையில் உளவுத்துறையில் சிறப்பாக பங்காற்றியவர்கள், தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் மரியாதை ஆகும். ஆனால் திரைப்படம் மற்றும் நாடகத்துறையில் சேவை ஆற்றியதை அங்கிகரிக்கும் விதமாக இந்த கெளரவம் டேனியலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

    விருதுகள் பெற்ற பிரபலங்கள்

    விருதுகள் பெற்ற பிரபலங்கள்

    இந்த ஆண்டு புத்தாண்டு விருதுகள் பட்டியலில் சிஎம்ஜி ஆன செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜார்ஜ் ஆகியோருக்கு அடுத்தபடியாக டேனியல் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. திரைப்பட துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர், ஆஸ்கார் விருது பெற்றவர்கள் என பலருக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

    சிக்கலில் சிக்கிய ராணி

    சிக்கலில் சிக்கிய ராணி

    ஆனால் டேனியலுக்கு சிஎம்ஜி கெளரவம் வழங்கப்பட்டதை பலரும் சோஷியல் மீடியாக்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டேனியலுக்காக ராணி எலிசபெத் பாரம்பரிய வழக்கத்தை உடைத்து விட்டதாக குற்றம்சாட்டி வருகின்றன. நிஜ வாழ்க்கை உளவாளிகளுக்கு வழங்கப்படும் கெளரவத்தை சினிமாவில் உளவாளியாக நடித்த டேனியலுக்கு ராணி வழங்கி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சம்பாதித்தது போதாதா

    சம்பாதித்தது போதாதா

    நடிப்பதற்காக சிஎம்ஜி வழங்கப்படுவதா. ஏன் அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்து மில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக சம்பாதித்தது, நூற்றுக்கணக்கான பட வாய்ப்புக்களை பெற்றது போதாதா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    Recently James bond actor Daniel craig honoured by Queen Elizebeth in new year award functon. CMG hounour was iven to Daniel. Many people criticize about this in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X