»   »  சாம் மெண்டிஸ் இனி ஜேம்ஸ் பாண்ட்டை இயக்க மாட்டார்!

சாம் மெண்டிஸ் இனி ஜேம்ஸ் பாண்ட்டை இயக்க மாட்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட்: பிரபல ஜேம்ஸ் பாண்ட் பட இயக்குநர் சாம் மெண்டிஸ் இனி தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படக் குழுவிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாம் மெண்டிஸ், டேனியல் கிரேக்கை வைத்து ஸ்கைபால் மற்றும் ஸ்பெக்டர் ஆகிய இரு ஜேம்ஸ்பாண்ட் படங்களை இயக்கியுள்ளார். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரை புதிய வடிவத்திற்குக் கொண்டு போனதில் மெண்டிஸுக்கு முக்கியப் பங்கு உண்டு.

இந்நிலையில், தற்போது அவர், இனி ஜேம்ஸ்பாண்ட் படங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். மெண்டிஸைத் தொடர்ந்து டேணியல் கிரேக்கும் ஜேம்ஸ் பாண்ட் படக் குழுவிலிருந்து விலகப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

கதை சொல்லி...

கதை சொல்லி...

தனது விலகல் குறித்து மெண்டிஸ் கூறுகையில், "நான் ஒரு கதை சொல்லி. ஒரு கதையை முடித்து விட்டால் அடுத்த கதைக்குப் போய் விடுவேன். புதிய கேரக்டர்களுக்குப் போய் விடுவேன். அது போலத்தான் இதுவும்" என்கிறார்.

அருமையான் அனுபவம்...

அருமையான் அனுபவம்...

மேலும், "ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கியது அருமையான சாகசமாக இருந்தது. ஒவ்வொரு விநாடியையும் ரசித்து எடுத்தேன். . அருமையான அனுபவம் கிடைத்தது. ஆனால் இனியும் அதில் தொடர விரும்பவில்லை. ஆனால் அடுத்தவர்கள் வர வேண்டிய நேரம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

டேணியல் கிரேக்...

டேணியல் கிரேக்...

ஏற்கனவே ஜேம்ஸ் பாண்ட் நிழலை விட்டு விலக விரும்புவதாக டேணியல் கிரேக்கும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே விரைவில் அவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

அடுத்த ஜேம்ஸ்பாண்ட்...

அடுத்த ஜேம்ஸ்பாண்ட்...

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு டாம் ஹிடில்சன், இத்ரீஸ் எல்பா, ஜேமி பெல் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

முதல்முறையல்ல...

முதல்முறையல்ல...

மெண்டிஸ் விலகுவதாக கூறுவது இது முதல் முறையல்ல. ஸ்கைபால் படம் எடுத்த முடித்த பிறகும் இப்படித்தான் கூறினார். ஆனால் ஸ்கைபால் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் தொடருவதாக அறிவித்தார். ஸ்பெக்டர் எடுத்தார். ஆனால் ஸ்பெக்டர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பொலிவு...

புதுப்பொலிவு...

டேணியல் கிரேக்கும், சாம் மெண்டிஸும் ஒரு சேர விலகும் நிலை வந்து விட்டதால் ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கி வரும் ஜேம்ஸ் பாண்ட் படக் குழு முழுமையாக புத்தம் புதுப் பொலிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
James Bond director Sam Mendes has called it quits, paving the way for a reimagination of the iconic British spy series.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil