»   »  உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை.. யாரு தெரியுமா.. எவ்வளவு தெரியுமா?

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை.. யாரு தெரியுமா.. எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ் : உலகிலேயே அதிகமாகச் சம்பாதிக்கும் நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் 'லா லா ‌லேண்ட்' திரைப்பட நாயகி எம்‌மா ஸ்டோன். இவர் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்', 'பேர்ட்மேன்' படங்களிலும் நடித்தவர்.

'லா லா லேண்ட்'என்ற இசை சார்ந்த ஆங்கிலப் படத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன். 'லா லா லேண்ட்' படத்தின் வெற்றியே எம்மாவின் சம்பளம் இப்படி எகிடுதகிடாக உயரக் காரணம்.

'பேர்ட்மேன்' படத்திற்காக 'சிறந்த துணை நடிகை'க்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 'லா லா லேண்ட்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

நம்பர் ஒன் :

நம்பர் ஒன் :

இன்றைய தேதிக்கு இவர் தான் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை. அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஹாலிவுட் பட நாயகிகளில் மிக அதிகமாகச் சம்பாதிப்பது இவர் தானாம்.

28 வயசு:

28 வயசு:

சமீபத்தில், ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் 28 வயதான நடிகை எம்‌மா ஸ்டோன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

ஒரே வருடத்தில் 180 கோடி :

ஒரே வருடத்தில் 180 கோடி :

கடந்த ஆண்டில் அவர் 180 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எம்மா ஸ்டோன் தற்போது பிரண்ட்ஸ் டிவி தொடரில் நடித்து வருகிறார்.

விளம்பரத் தூதுவர் :

விளம்பரத் தூதுவர் :

இவரை அடுத்து, நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் இரண்‌டாமிடத்தில் இருக்கிறார். தற்போது, 'ப்ரண்ட்ஸ்' தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை எம்‌மா ஸ்டோன், ஸ்மார்ட் வாட்டர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் தூதுவராகவும் இருந்து வருகிறார்.

3வது இடத்தில் ஜெனிஃபர் லாரன்ஸ்

3வது இடத்தில் ஜெனிஃபர் லாரன்ஸ்

21016-ம் ஆண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜெனிஃபர் லாரன்ஸ் 24 மில்லியன் டாலர் சம்பாதித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

English summary
Hollywood Actress Emma stone became a world's highest paid actress. She won an academy award for a film la la land.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil