Don't Miss!
- Technology
சியர்ஸ் சொல்லுங்க! Coca-Cola ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு! விலை என்ன?
- News
"இந்து தர்மம்.." பிரதமரானது குறித்த கேள்விக்கு.. யோசிக்காமல் சட்டென ரிஷி சுனக் அளித்த அடடே பதில்
- Finance
11 வருடத்தில் 40 மடங்கு சொத்து மதிப்பு உயர்வு.. யார் இந்தக் கர்நாடகா எம்பி ரமேஷ் சந்தப்பா..!!
- Sports
அடப்பாவமே.. ரோகித் சர்மாவுக்கு 35 வயதிலா இந்த இக்கட்டான நிலைமை??.. ஆஸி, தொடரில் நிரூபித்தே தீரணும்!
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவதார் 2வின் பிரத்யேக புகைப்படங்கள் ரிலீஸ்.. எதிர்பாராத கதாபாத்திரத்தில் அந்த பிரபல நடிகை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அவதார் முதல் பாகத்தில் ஜேம்ஸ் கேமரூன் அந்த அவதார் பிராஜெக்ட்டுக்கே காரணமாக இருந்த கிரேஸ் அகஸ்டின் எனும் பெண் விஞ்ஞானியை படத்தில் கொன்று விடுவார்.
இந்நிலையில், அவதார் 2 படத்தில் யாரும் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் கிரேஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை சிகர்னி வீவர் கம்பேக் கொடுக்க உள்ளார்.
இந்த ஒரு கூஸ்பம்ப்ஸ் விஷயம் மட்டுமின்றி ஏகப்பட்ட பிரத்யேக அவதார் 2 படத்தின் காட்சிகளை படக்குழு எம்பயர் மேகஸினில் வெளியிட்டு இருக்கிறது.
மிரட்டலாக
ஆன்லைனில்
வெளியானது
அவதார்
2
டிரைலர்....கொண்டாடும்
ரசிகர்கள்

உலகையே அசர வைத்த அவதார்
சுமார் 25 ஆயிரம் கோடி வசூலை குவித்து உலகளவில் பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த படம் அவதார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இரண்டாவது முறையாக வெளியாகி தான் அவதார் வசூல் சாதனையை வீழ்த்தியது. ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அளப்பறிய கற்பனையில் உருவாகி உலகையே அசர வைத்த படமான அவதார் 2009ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை தன் பக்கம் அப்படியே அல்வா போல அள்ளிக் கொண்டது. இந்நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாக போகிறது.

அவதார் தி வே ஆஃப் வாட்டர்
ஆக்ஸிஜனே இல்லாத பாண்டோராவில் ஓ2 கலவையான தண்ணீர் எங்கே இருந்து வந்தது என்கிற கேள்விக்கெல்லாம் விடை சொல்லாமல் முதல் பாகத்திலேயே அருவியில் இருந்து குதிக்கும் காட்சிகளை வைத்து அந்த நாவி இன மக்களுக்கு தண்ணீர் இருக்கு, அங்கே மரங்கள் வளர்கிறது என்கிற கதையை சொல்லிவிட்ட ஜேம்ஸ் கேமரூன், இரண்டாம் பாகத்தையே தி வே ஆஃப் வாட்டர் என இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். டிராகன்கள் டொருக் மாக்டோவாக பறந்த ஸ்க்ரீனில் பிரம்மாண்ட திமிங்கலங்கள் என்ன க்ரியேட்டிவிட்டியில் ரசிகர்களை கொள்ளை கொள்ள போகிறதோ தெரியவில்லை.

13 வருஷம் ஆகிடுச்சு
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் உலகத்திலேயே தன்னை 13 ஆண்டுகள் அர்பணித்து விட்டார். ஜேக் சுல்லி, நெய்த்ரி கதாபாத்திரங்களில் நடித்த சாம் வொர்த்திங்கடன் மற்றும் ஜோ சால்டனாவுக்கும் 13 வயசு கூடியிருக்கும். ஆனால், இன்னமும் அதே மிடுக்கோடு அவர்கள் நாவிக்களாக இந்த படத்தில் எப்படி நடித்து அசத்தி உள்ளனர் என்பதை பார்க்கவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

அடுத்த இலக்கு
உலகளவில் 200க்கும் மேற்பட்ட மொழிகளில் அவதார் 2 திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டுள்ளார். அப்படி வெளியாகும் பட்சத்தில் 25 ஆயிரம் கோடி வசூலை எல்லாம் உஃப் என ஊதி விட்டு 30 ஆயிரம் கோடிக்கு மேல் அடுத்த இலக்கை நிர்ணயித்து விடுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அவதார் 2 படத்தை தொடர்ந்து 3 மற்றும் 4ம் பாகங்களும் விரைவில் வெளியாக உள்ளன.