twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திண்டாடும் தியேட்டர்கள்.. கடந்த ஆண்டு இதே நாளில் எப்படி கொண்டாடியது தெரியுமா? #AvengersEndgame

    |

    சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் இதே நாளில் தான் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.

    Recommended Video

    Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

    தானோஸ் எப்படி அழிவான், கேப்டன் மார்வெல் அவெஞ்சர்ஸ்ட் டீமுக்கு உதவி செய்வாரா என்ற பலவித கேள்வி மனநிலையில் தியேட்டரில் அமர்ந்த ரசிகர்களுக்கு படம் ஆரம்பித்ததில் இருந்து எண்ட் வரை சரவெடி பட்டாசு காட்சிகள் தான்.

    தானோஸ் அழிவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அவனது அழிவுடன், அயன்மேன் மரணம் மேலும், சோகத்தை ஊட்டிய நாள் இன்று.

    சொந்தங்கள் முன்னிலையில்.. லாக்டவுனில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்ட நடிகர்.. ரசிகர்கள் வாழ்த்து!சொந்தங்கள் முன்னிலையில்.. லாக்டவுனில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்ட நடிகர்.. ரசிகர்கள் வாழ்த்து!

    அவதாரை மிஞ்சிய வசூல்

    அவதாரை மிஞ்சிய வசூல்

    2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் தான் உலகளவில் 25 ஆயிரம் கோடி வசூல் செய்து கடந்த பத்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தது. மார்வெல் உலகின் பிரம்மாண்ட படைப்பான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், பல போராட்டங்களுக்குப் பிறகு, கடைசியாக அவதார் வசூல் சாதனையை முறியடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

    தியேட்டர்கள் கொண்டாட்டம்

    தியேட்டர்கள் கொண்டாட்டம்

    உலகளவில் 25 ஆயிரம் கோடி வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் குவித்த நிலையில், அந்த படத்தை வெளியிட்ட அனைத்து தியேட்டர்களும், அமோகமாக வசூல் மழையில் நனைந்தது. தியேட்டர்களில் தினம் தினம் ரசிகர்களின் கூட்டமும், கொண்டாட்டமுமாக தியேட்டர்கள் கடந்த ஆண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    யார் கண் பட்டதோ

    யார் கண் பட்டதோ

    கடந்த ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் ரிலீஸை தொடர்ந்து தியேட்டர்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தன. யார் கண் பட்டதோ என்னவோ தெரியவில்லை. இந்த கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் அனைத்து தியேட்டர்களுக்கும், திண்டுக்கல் பூட்டை விட பெரிய சைஸ் பூட்டை வாங்கி கடந்த ஒன்றரை மாதங்களாக பூட்டி விட்டது.

    தோர் நடிகர்

    தோர் நடிகர்

    கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் இந்தியாவில் உருவான எக்ஸ்ட்ராக்‌ஷன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. கடந்த ஆண்டு சர்வதேச திரைகளில் தானோஸின் தலையை ஒரே வெட்டாக வெட்டிய தோர் நடிகரின் படத்தை இந்த ஆண்டு ரசிகர்களால் தியேட்டர்களில் காண முடியவில்லை.

    டிரெண்டிங்

    டிரெண்டிங்

    மார்வெல் தயாரிப்பில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கிறிஸ் எவன், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன், மார்க் ரஃபலோ, பிரை லார்சன், ஜோஷ் பிராலின் என மல்டி சூப்பர் ஹீரோ நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரிலீசாகி ஒரு வருடம் கடந்துள்ளதை ரசிகர்கள் ட்விட்டரில் #AvengersEndgame என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

    அயன்மேன் மரணம்

    அயன்மேன் மரணம்

    அயன்மேன் படத்தில் இருந்து ஆரம்பித்த டோனி ஸ்டார்க்கின் பயணம், அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கியதில் இருந்து, அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் தானோஸை அழிக்க தன்னுயிரையே தியாகம் செய்தது வரையென ஒட்டுமொத்த மார்வெல் ரசிகர்களாலும் மறக்க முடியாத அளவுக்கு நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் தனது நடிப்பை அந்த கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

    English summary
    Not only evil Thanos died on this day, we won a super battle but also we lose Tony Stark at the End. All over the world Marvel fans celebrate one year of Avengers Endgame release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X