»   »  ரஜினி, விஜய் பட டிரெய்லர் சாதனையை எல்லாம் தூக்கி சாப்பிட்ட ஹாலிவுட் பட டிரெய்லர்

ரஜினி, விஜய் பட டிரெய்லர் சாதனையை எல்லாம் தூக்கி சாப்பிட்ட ஹாலிவுட் பட டிரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8 ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.

வின் டீஸல், ராக் உள்ளிட்டோர் நடித்துள்ள ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8 படத்தின் டிரெய்லர் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள் அதை 13.9 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

Fast and Furious 8 breaks most-viewed trailer record

இதன் மூலம் 24 மணிநேரத்தில் உலக அளவில் அதிகம் போரால் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. முன்னதாக பியூட்டி அன்ட் தி பீஸ்ட் ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் அந்த சாதனையை படைத்திருந்தது.

பியூட்டி அன்ட் தி பீஸ்ட் டிரெய்லரை 12.7 கோடி பேர் பார்த்திருந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைமைஸ் சதுக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வின் டீஸல், ராக், டைரீஸ் கிப்சன், மிஷல் ரோட்ரிகஸ், இயக்குனர் எப். கேரி கிரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டிரெய்லரை ஃபேஸ்புக் லைவிலும் வெளியிட்டனர்.

English summary
Vin Diesel's Fast and Furious 8 trailer has become the most viewed trailer by getting 139 million views in just 24 hour of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil