»   »  பைண்டிங் நெமோவின் வசூல் வரலாற்றை இந்த 'பைண்டிங் டோரி' முறியடிக்குமா?

பைண்டிங் நெமோவின் வசூல் வரலாற்றை இந்த 'பைண்டிங் டோரி' முறியடிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: கடந்த வாரம் இந்தியாவில் வெளியான பைண்டிங் டோரி (அனிமேஷன்) திரைப்படம், உலக அளவில் 185 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

13 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பைண்டிங் நெமோ படத்தின் 2 வது பாகமாக பைண்டிங் டோரி வெளியாகியிருக்கிறது.

Finding Dory worldwide Box Office Collections

முதல் பாகத்தில் தொலைந்து போன நெமோவைத் தேடி அதன் தந்தை பயணிப்பார். இந்த பாகத்தில் டோரி அதன் குடும்பத்தை தேடிச் செல்வது தான் படத்தின் கதை.

கலர் கலரான மீன்கள், கடல், சாகசப் பயணம் என கலந்து கட்டி வெளியாகியிருக்கும் பைண்டிங் டோரி சிறுவர்கள்,பெரியவர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

சுமார் 200 மில்லியன் டாலர் செலவில் வெளியாகியிருக்கும் இப்படம் இதுவரை 185 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

திரையிட்ட இடமெல்லாம் பைண்டிங் டோரி வசூல் மழை பொழிவதால், ஆண்ட்ரூ ஸ்டாண்டன் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனராம்.

முதல் பாகமான பைண்டிங் நெமோ சுமார் 936 மில்லியன் டாலர்களை வசூலித்து உலக சாதனை புரிந்தது. அந்த வரிசையில் பைண்டிங் டோரியும் இணையும் என ஹாலிவுட் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் அதிக வசூல் செய்த அனிமேஷன் படங்களில் பைண்டிங் நெமோ 2 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. விரைவில் அந்த இடத்தை பைண்டிங் டோரி கைப்பற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Box Office: Finding Dory worldwide Collects $185 Million Dollars Still Now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil