»   »  தாத்தா ஆக வேண்டிய வயதில் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல நடிகர்

தாத்தா ஆக வேண்டிய வயதில் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவி அமல் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு பல காலம் சிங்கிளாக இருந்த ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி இங்கிலாந்தை சேர்ந்த வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை திருமணம் செய்தார்.

நிறை மாத கர்ப்பிணியான அமல் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

அமலுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தைக்கு எல்லா க்ளூனி என்றும், ஆண் குழந்தைக்கு அலெக்சாண்டர் க்ளூனி என்றும் பெயர் வைத்துள்ளனர். தாயும், சேய்களும் நலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ்

ஜார்ஜ்

56 வயதில் ஜார்ஜ் க்ளூனி முதல் முறையாக தந்தையாகியுள்ளார். அவர் வயது நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் கல்லூரியில் படிக்கிறார்கள், திருமணம் செய்து வாழ்கிறார்கள்.

சிரிப்பு

சிரிப்பு

என் வயது நண்பர்கள் எல்லாம் குழந்தை பெற்று வளர்த்துவிட்டார்கள். நான் தற்போது தான் தந்தையாகிறேன். இப்ப தான் அப்பாவாகிறாயா என என் நண்பர்கள் கலாய்க்கிறார்கள் என்றார் க்ளூனி.

திருமணம்

திருமணம்

ஜார்ஜ் க்ளூனி அமலை 2014ம் ஆண்டு இத்தாலியின் வெனிஸ் நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் கழித்து அவர் தந்தையாகியுள்ளார்.

English summary
Hollywood actor George Clooney's wife Amal has given birth to twins Ella and Alexander. Clooney has become father for the first time at the age of 56.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil