»   »  பியர்ஸ் பிராஸ்னனின் மகள் புற்றுநோய்க்குப் பலி... சோகத்தை விழுங்கி மீண்டும் ஷூட்டிங் திரும்பினார்

பியர்ஸ் பிராஸ்னனின் மகள் புற்றுநோய்க்குப் பலி... சோகத்தை விழுங்கி மீண்டும் ஷூட்டிங் திரும்பினார்

By Sudha
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பியர்ஸ் பிராஸ்னனின் மகள் சார்லட் பிராஸ்னன் புற்றுநோய்க்கு மரணமடைந்துள்ளார். மகளின் மரணத்தால் சிதறுண்டு போன நிலையிலும், தனது பணியில் மீண்டும் தீவிரமாகியுள்ளார் பிராஸ்னன்.

60 வயதாகும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு இரு மகன்கள். இந்த நிலையில் மகள் சார்லட்டை சிறு வயதிலேயே தத்தெடுத்தது பிராஸ்னன்- காஸென்ட்ரா தம்பதி.

காஸென்ட்ரா தனது 42வது வயதில் புற்றுநோய்க்குப் பலியானார். தற்போது அதேபோல மகள் சார்லட்டும் அதே 42 வயதில் புற்றுநோய்க்கு இரையாகியுள்ளார்.

மூத்த மகள் சார்லெட்

மூத்த மகள் சார்லெட்

பியர்ஸ் பிராஸ்னனின் மூத்த மகள்தான் சார்லெட். இவரது தாயார் காஸென்ட்ரா தனது கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக நின்றபோது காஸென்ட்ராவை மணந்து கொண்டு சார்லெட்டை தத்தெடுத்துக் கொண்டார். மகள் மீது நிறையப் பிரியம் வைத்திருந்தார் பிராஸ்னன். அவரது மனைவி காஸென்ட்ராவுக்கும் சார்லெட் என்றால் உயிர்.

கருப்பைப் புற்றுநோய்

கருப்பைப் புற்றுநோய்

சார்லெட்டுக்கு கருப்பை புற்றுநோய் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மனம் தளராத தீர மங்கை

மனம் தளராத தீர மங்கை

தனக்கு புற்றுநோய் வந்திருப்பது தெரிந்தும் கூட மனம் தளரவில்லை சார்லெட். மிகவும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் அவர் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.

லண்டனில் மரணம்

லண்டனில் மரணம்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சார்லெட்டின் நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் அவர் தனது குடும்பத்தினர் சுற்றிலும் இருக்க, அவர்களுக்குப் பிரியா விடை கொடுத்து உயிர் நீத்தார்.

மகள் மரணத்தை அறிவித்த பிராஸ்னன்

மகள் மரணத்தை அறிவித்த பிராஸ்னன்

தனது மகள் மரணமடைந்த செய்தியை பிராஸ்னன் ஒரு சிறு அறிக்கை மூலம் உலகுக்கு அறிவித்தார். அதில், ஜூன் 28ம் தேதி எனது அன்பு மகள் சார்லெட் எமிலி, இறைவனடி சேர்ந்தார். கருப்பை புற்றுநோயால் அவர் மரணமடைந்தார். அவர் மரணித்தபோது கணவர் அலெக்ஸ், குழந்தைகள் இசபெல்லா, லூகாஸ், சகோதரர்கள் கிறிஸ்டோபர், சீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மீண்டும் ஷூட்டிங்கில் பிசியான பிராஸ்னன்

மீண்டும் ஷூட்டிங்கில் பிசியான பிராஸ்னன்

மகள் மரணத்தால் பிராஸ்னன் மிகவும் உடைந்து போயிருப்பதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்ட பிராஸ்னன் மீண்டும் படப்பிடிப்பில் மும்முரமாகியுள்ளார்.

அதிரடிக் காட்சியில் நடித்தார்

அதிரடிக் காட்சியில் நடித்தார்

உள்ளுக்குள் சோகம் வாட்டி வதைத்தாலும் தான் நடித்து வரும் நவம்பர் மேன் இன் செர்பியா என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிராஸ்னன், அதில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் வழக்கம்போல நடித்துக் கொடுத்தாராம். காரில் அமர்ந்தபடி துப்பாக்கியால் சுட்டபடி செல்லும் காட்சியை படமாக்கியபோது படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனராம்.

பெல்கிரேடில்

பெல்கிரேடில்

இந்தக் காட்சியை பெல்கிரேடில் வைத்துப் படமாக்கினர். படப்பிடிப்புத் தளத்தில் அனைவருடனும் வழக்கம் போல பேசிப் பழகினாராம் பிராஸ்னன். மிகப் பெரும் பொருட் செல்வில் இந்த துப்பறியும் கதை படமாகி வருகிறதாம். இப்படத்தில் பிராஸ்னன், சிஐஏ ஏஜென்ட்டாக நடிக்கிறார்.

தாயைப் போல மகளும் மரணம்

தாயைப் போல மகளும் மரணம்

சார்லெட்டின் தாயார் காஸன்ட்ராவும் இதே போலத்தான் புற்று நோய்க்கு தனது 42வது வயதில் பலியானார். அதேபோல மகள் சார்லெட்டும் இறந்திருப்பது பிராஸ்னன் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகையின் மகள்

நடிகையின் மகள்

சார்லெட்டின் தாயார் காஸன்ட்ரா ஆஸ்திரியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். பார் யுவர் ஐஸ் ஒன்லி படத்தி்ல இவர்தான் ஜேம்ஸ் பாண்டைக் கவரும் அழகி வேடத்தில் நடித்தவர். அப்படத்தில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் மணந்து கொண்டனர்.

இந்தியா வந்தபோது சுகவீனமான காஸன்ட்ரா

இந்தியா வந்தபோது சுகவீனமான காஸன்ட்ரா

1987ம்ஆண்டு இந்தியாவுக்கு ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தபோது காஸன்ட்ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் பரிசோதனையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சை தொடங்கியது. 4 வருட போராட்டத்திற்குப் பின்னர் 1991ம்ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸில் மரணமடைந்தார் காஸன்ட்ரா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Grieving Pierce Brosnan headed back to work on Tuesday, just days after the tragic death of his daughter Charlotte. The Irish actor, 60, had rushed back from shooting November Man in Serbia to be at his daughter's bedside when she passed away in London on Friday following a three=year battle with ovarian cancer. However, the former Bond star couldn't spend too long away from the big budget spy thriller and resumed filming in the capital Belgrade this week.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more