»   »  உடம்பு சரியில்லையாமாம்: டாப்லெஸ் செல்ஃபி எடுத்த ஹாலிவுட் நடிகை

உடம்பு சரியில்லையாமாம்: டாப்லெஸ் செல்ஃபி எடுத்த ஹாலிவுட் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:ஹாலிவுட் நடிகை க்வெய்னத் பால்ட்ரோ தனக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில் டாப்லெஸ்ஸாக செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அயர்ன் மேன் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியரின் ஜோடியாக நடித்துள்ளவர் க்வெய்னத் பால்ட்ரோ(43). அமெரிக்காவில் தற்போது பலருக்கு காய்ச்சல், ஜலதோஷமாக உள்ளது. இந்நிலையில் பால்ட்ரோவுக்கும் ஜலதோஷமாக உள்ளது.

Gwyneth Paltrow

5 நாட்களாக அவருக்கு உடல்நலம் சரியில்லையாமாம். உடனே அம்மணி இன்ப்ராரெட் சானா எடுத்துள்ளார். உடல்நலம் சரியில்லை என்று கூறி படுக்கையில் படுக்காமல் அவர் டாப்லெஸ்ஸாக செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பால்ட்ரோ தனது காதலர் பிராட் பால்சுக்குடன்(44) சேர்ந்து டிவி நிகழ்ச்சியின் பிரீமியருக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் உடல்நலம் சரியில்லாததால் அவர் செல்லவில்லை.

பால்ட்ரோ தன்னுடன் வராவிட்டாலும் பால்சுக்கிற்கு தனது காதலி மீது சிறிதும் கோபம் இல்லையாம். பால்ட்ரோ ஒரு அருமையான பெண். எங்களுக்கு இடையேயான உறவில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பால்சுக் தெரிவித்துள்ளார்.

பால்சுக்கும், பால்ட்ரோவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காதலித்து வருகிறார்கள்.

English summary
Hollywood actress Gwyneth Paltrow has posted a topless selfie of hers while she is suffering from flu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil