»   »  ஹாரி பாட்டர் பட நடிகர் தூக்கத்திலேயே மரணம்: ஹாலிவுட் இரங்கல்

ஹாரி பாட்டர் பட நடிகர் தூக்கத்திலேயே மரணம்: ஹாலிவுட் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாரி பாட்டர் படத்தில் பேராசிரியர் எவரார்டாக நடித்த சாம் பீஸ்லி காலமானார்.

ஹாரி பாட்டர் படத்தில் பேராசிரியர் எவரார்டாக நடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த சாம் பீஸ்லி(101). அவர் கடந்த 12ம் தேதி இரவு தூக்கத்திலேயே இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கு வரும் 21ம் தேதி மதியம் 2 மணிக்கு லண்டனில் நடைபெறுகிறது.

'Harry Potter' actor Sam Beazley dies at 101

மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சாம் ஹாரி பாட்டர் படம் மூலம் உலகப் புகழ் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து ராணுவத்தில் இருந்தவர் சாம்.

போருக்கு பிறகு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கடை நடத்தி வந்தார். பின்னர் தனது 75வது வயதில் மீண்டும் படங்கள், நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.

ஹாரி பாட்டர் படத்தில் நடித்தவர்களில் சாம் தான் மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Sam Beazley, who played Professor Everard in "Harry Potter and the Order of the Phoenix", has passed away. He was 101.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil