»   »  ஜேம்ஸ் பாண்ட் செக்ஸியானவர்தான், ஆனால் ஆணாதிக்கம் பிடித்தவர்.. சொல்கிறார் டேணியல் கிரேக்

ஜேம்ஸ் பாண்ட் செக்ஸியானவர்தான், ஆனால் ஆணாதிக்கம் பிடித்தவர்.. சொல்கிறார் டேணியல் கிரேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தொடர்ந்து 4வது முறையாக நடித்துள்ள டேணியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட்டின் குணாதிசயம் குறித்து மனம் திறந்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் ஒரு ஆணாதிக்கம் பிடித்த கதாபாத்திரம் என்றும், தனிமை விரும்பி என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

47 வயதான டேணியல் கிரேக், ஸ்பெக்ட்ரே என்ற புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கிரேக்.

பணக்காரனாக்கிய ஜேம்ஸ்

பணக்காரனாக்கிய ஜேம்ஸ்

இதுகுறித்து கிரேக் கூறுகையில், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மூலம் நான் பெரும் பணக்காரன் ஆகியுள்ளேன் என்பது உண்மைதான். அதை நான் மறுக்க மாட்டேன். ஜேம்ஸ் என்னை உயர்த்தியவன்.

ஆனால் நல்லவன் இல்லையே

ஆனால் நல்லவன் இல்லையே

ஆனால் ஜேம்ஸ் பாண்ட் ரொம்ப நல்லவன் என்று கூறி விட முடியாது. அவன் செக்ஸியானவன்தான். பெண்களை மயக்கக் கூடிய சக்தி படைத்தவன் தான். ஆனால் பெண்களை பகடைக் காயாக மட்டுமே பார்ப்பவன். பெண்களை வெறுப்பவன். பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்ப்பவன். ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவன். தனிமையை விரும்புபவன்.

இந்தப் படத்தில் அப்படி இருக்காது

இந்தப் படத்தில் அப்படி இருக்காது

அதேசமயம், இதற்கு முன்பு வந்த ஜேம்ஸ் பாண்ட் (நான் நடித்த படங்கள் உள்பட) அப்படி இருந்திருக்கலாம். ஆனால் ஸ்பெக்ட்ரே அப்படி இருக்காது. அதில் அவன் மாறுபட்டனவாக இருப்பான்.

பெண்களை உயர்வாக காட்டியுள்ளோம்

பெண்களை உயர்வாக காட்டியுள்ளோம்

ஸ்பெக்ட்ரே படத்தில் பெண்களை சற்று உயர்வாகவே காட்டியுள்ளோம். உலகம் மாறி விட்டது அல்லவா. முந்தைய படங்களில் வந்த நாயகிகளை விட இந்தப் படத்தில் வரும் நாயகி சற்று உயர்வானவராக காட்டப்பட்டிருப்பார்.

முதிர்ச்சியான பெண்ணுடன்

முதிர்ச்சியான பெண்ணுடன்

இதுவரை இல்லாத வித்தியாசமாக, இந்த படத்தில் தன்னை விட வயதில் சற்று மெச்சூரிட்டியான பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வார் ஜேம்ஸ் பாண்ட். மோனிகா பெலுச்சி அதை அழகாக காட்டியிருப்பார்.

பெண்கள் நிலைக்க மாட்டார்கள்

பெண்கள் நிலைக்க மாட்டார்கள்

ஜேம்ஸ் பாண்ட் பெண்களைக் கவரக் கூடியவன் என்றாலும் கூட அவனிடம் எந்தப் பெண்ணும் நிலைக்க மாட்டார். இதுவரை காட்டப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் மூலம் அதை உணரலாம். அது சோகமானதுதான். ஆனால் என்ன செய்வது, அவருடைய கேரக்டர் அப்படி என்றார் கிரேக்.

குவியும் குற்றச்சாட்டுக்கள்

குவியும் குற்றச்சாட்டுக்கள்

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பெண்களை குறைத்தே மதிப்பிடுவது வழக்கம். இது சர்ச்சையாகவும் உள்ளது. பெண்களை மதிக்கும் வகையிலான காட்சிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.

பார்க்கலாம், ஸ்பெக்ட்ரே எப்படி இருக்கிறது என்பதை. இந்தப் படம் வருகிற அக்டோபர் 26ம் தேதி இங்கிலாந்தில் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Craig, 47, who has played the world's best-known spy since 2005, told Esquire magazine he would bring 'weight and meaning' to the role in his fourth outing as Bond, Spectre.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil