»   »  7 வயதில் பாலியல் தொல்லை- 14 வயதில் பலாத்காரம்- ஹாலிவுட் நடிகை பகீர் தகவல்

7 வயதில் பாலியல் தொல்லை- 14 வயதில் பலாத்காரம்- ஹாலிவுட் நடிகை பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 7 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், 14 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் ஹாலிவுட் நடிகை ஆஷ்லி ஜுட் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்குள்ளாவதற்கு எதிரான உலக மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹாலிவுட் நடிகை ஆஷ்லி ஜுட் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,

பலாத்காரம்

பலாத்காரம்

எனக்கு 7 வயது இருக்கும்போது பாலியல் தொல்லைக்கு ஆளானேன். 14 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன். அதன் பிறகு 1998ம் ஆண்டு மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டேன்.

அதிசயம்

அதிசயம்

இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் நான் கடத்தப்படாதது அதிசயம் தான். பாலியல் தொல்லைகளை இனியும் பெண்கள் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

பொங்கி எழுக

பொங்கி எழுக

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக அனைவரும் பொங்கி எழ வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட்டில் ஹீரோக்களுக்கு ஒரு சம்பளம், ஹீரோயின்களுக்கு ஒரு சம்பளம். ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம். ஆணுக்கும், பெண்ணுக்கும் சரி சமமாக சம்பளம் கொடுப்பது இல்லை என்றார் ஆஷ்லி.

English summary
Hollywood actress Ashley Judd said she was molested at 7 and raped at 14 years. She was again raped when she was 30 year old.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil