»   »  நகைச்சுவை மன்னன் நாகேஷின் மானசீக குரு மறைந்தார்!

நகைச்சுவை மன்னன் நாகேஷின் மானசீக குரு மறைந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூ ஜெர்சி : ஹாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஜார்ஜ் லூயிஸ். இவர்களுக்கு குருவாகத் திகழ்ந்தவர் நடிகர் ஜெர்ரி லூயிஸ். 91 வயதாகும் இவர் நேற்று முன்தினம் காலமானார்.

தமிழின் பிரபல நகைச்சுவை நடிகரான நாகேஷின் மானசீக குரு இவர்தான். இவர் மேடை நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி தொலைக்காட்சிகளில் தோன்றி பின் புகழ்பெற்ற இரட்டை காமெடியன்களில் ஒருவராக மாறினார். இவரும் டீன் மார்ட்டினும் சேர்ந்து செய்த காமெடி நிகழ்ச்சிகளை டிஸ்னி நிறுவனம் கார்ட்டூனாக வெளியிட்டது. நம்ம ஊர் கவுண்டமணி செந்தில் போல இவர்கள் ஹாலிவுட்டின் காமெடி ஜோடி.

Hollywood comedian Jerry Lewis passed away

பின் தனியே பிரிந்த அவர் எழுதி, இயக்கி வெளியிட்ட 'Naughty Professor' படம் அமெரிக்காவின் 100 சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வானது. இவர் இதுவரை 21 படங்களை இயக்கியிருக்கிறார். பல இயக்குநர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பல நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து கலெக்‌ஷன் மன்னன் என பெயரெடுத்தார்.

Hollywood comedian Jerry Lewis passed away

ஜெர்ரி லூயிஸ் ஒருமுறை உடுத்திய ஆடைகளை மீண்டும் அணியமாட்டாராம். அந்த ஆடைகளை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவாராம். செவாலியர் விருது, பிரிட்டிஷ் அகாடமி விருது, அமெரிக்கன் காமெடி விருது எனப் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகர் ஜெர்ரி லூயிஸ் மறைவு ஹாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more about: jerry lewis, hollywood
English summary
Hollywood veteran comedian Jerry Lewis passed away. He directed 21 films in hollywood cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil