»   »  சென்னையில், வி.ஐ.பி -2 வசூலை முந்திய ஹாலிவுட் படம்!

சென்னையில், வி.ஐ.பி -2 வசூலை முந்திய ஹாலிவுட் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அன்னபெல் க்ரியேஷன் ஹாலிவுட் படம் வேலையில்லா பட்டதாரி -2 பட வசூலை முந்தியது.

ஹாலிவுட்டில் பேய் படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் ஒருசில படங்கள் மட்டுமே பார்ப்பவர்களை மிரட்டிவிடும். அந்த வகையில் 'தி கான்ஜூரிங்' படம்தான் இதுவரை வந்த ஹாலிவுட் பேய் படங்களிலேயே மிரட்டலான படம். அந்தப் படத்தில் உள்ள கதையில் வரும் ஒரு காட்சியை மையமாக எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் அன்னபெல். இது 'தி கான்ஜூரிங்' படத்தை விட மிரட்டலானது.

Hollywood film collection is more than VIP-2

கடந்த மாதத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரே அச்சத்தில் உறைய வைக்கும் வகையில் இருந்தது. ஆகவே, படம் இன்னும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த அன்னபெல் படத்தின் இரண்டாம் பாகம் 'அன்னபெல் க்ரியேஷன்' (Annabelle Creation) எனும் பெயரில் வெளியாகியது.

கோலிவுட்டில் இந்த வருடம் ஆரம்பித்து முதன் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தான் எந்த ஒரு தமிழ்ப் படமும் வரவில்லை. இந்நிலையில் ஹாலிவுட் படமான அன்னபெல் இரண்டாம் பாகம் மட்டும் வெளிவந்தது. இந்தப்படம் சென்னையில் மட்டும் 3 நாட்களில் ரூபாய் 82 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

இது வேலையில்லா பட்டதாரி -2ஐ விட கடந்த வார வசூலில் அதிகம். சென்னையில், வேலையில்லா பட்டதாரி - 2 வார முடிவில் ரூபாய் 3.25 கோடியும், தரமணி ரூபாய் 1.05 கோடியும் வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more about: vip 2, ஹாலிவுட்
English summary
'Annabelle -2' collection is more than VIP-2. It collects Rs. 82 Lakhs in 3 days in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil