»   »  மல்லுவுட், கோலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டிலும் ஒரே விவாகரத்தா இருக்கே!

மல்லுவுட், கோலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டிலும் ஒரே விவாகரத்தா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மல்லுவுட், கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை விவாகரத்து செய்திகளாக உள்ளது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் திரையுலகை சேர்ந்தவர்களின் வாழ்வில் விவாகரத்து சாதாரண விஷயமாகி வருகிறது. அவர்கள் விவாகரத்து செய்ய உரிய காரணங்களும் உள்ளன.

மல்லுவுட், கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை விவாகரத்து சம்பவங்களாக உள்ளது.

மல்லுவுட்

மல்லுவுட்

மலையாள திரையுலகில் திவ்யா உன்னி தனது கணவரை பிரிந்து அமெரிக்காவில் இருந்து வந்து கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்த பாலாவும் மனைவியை பிரிந்துள்ளார்.

கோலிவுட்

கோலிவுட்

நடிகை அமலா பால் தனது காதல் கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் தனது கணவர் அஸ்வினை பிரிந்துள்ளார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட்டின் பிரபல ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகை ஏஞ்சலினா ஜூலியும், பிராட் பிட்டும். அவர்களை ஹாலிவுட்காரர்கள் பிராஞ்சலினா என்று அன்போடு அழைத்தனர். இந்நிலையில் ஜூலி பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

பிராட் பிட்

பிராட் பிட்

பிராட் பிட் சக நடிகைகள் மற்றும் குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களுடன் நெருக்கமாக இருந்து வந்தது ஜூலிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஒரு முறை ஜூலி தனது கணவரும், ஆயாவும் ஒன்றாக இருக்கும்போது கையும், களவுமாக பிடித்துவிட்டாராம்.

வருத்தம்

வருத்தம்

ஜூலி விவாகரத்து கோரியுள்ளதுடன் 6 குழந்தைகளும் தன்னுடன் இருக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார். இந்நிலையில் ஜூலி விவாகரத்து வரை சென்றுள்ளது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக பிராட் பிட் தெரிவித்துள்ளார்.

ஜெனிபர் ஆனிஸ்டன்

ஜெனிபர் ஆனிஸ்டன்

பிராட் பிட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனின் கணவராக இருந்தபோது ஜூலிக்கு அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது என ஹாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து அறிந்த ஆனிஸ்டன் பிட்டை பிரிந்துவிட்டார். அதன் பிறகு பிராட் பிட் ஜூலியுடன் சேர்ந்துவிட்டார்.

English summary
After Mollywood and Kollywood, divorce bug has bitten Hollywood couple also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil