twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் மரணம்.. இறுதி வரை எச்.ஐ.வி., நோயாளிகளுக்காக போராடிய மனிதர்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் எழுத்தாளர் லேரி கிராமர் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84.

    தி நார்மல் ஹார்ட், ஃபகட்ஸ், தி அமெரிக்கன் பீப்பிள், தி டெஸ்டினி ஆஃப் மி என பல புத்தகங்களை எழுதியவர்.

    Hollywood writer and AIDS activists Larry Kramer no more

    மேடை நாடகங்கள், ஹாலிவுட் படங்களுக்கு கதையாசிரியர் என பன்முகம் கொண்ட லேரி கிராமர், தனது வாழ்நாள் முழுவதும் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு ஆதரவாக தனது எழுத்துக்கள் மூலம் குரல் கொடுத்தவர்.

    ஓரினச் சேர்க்கைக்கு அனைத்து நாடுகளும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் போராடியவர்.

    கடந்த புதன் கிழமை லேரி கிராமர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    “மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் !“மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் !

    ஹல்க் நடிகர் மார்க் ரஃபலோ இவர் எழுதிய பிரபல நாவலான தி நார்மல் ஹார்ட் கதையை திரைப்படமாக உருவாக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹேரி கிராமரின் மரணத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகையான ஜூலியா ராபர்ட்ஸ், லின் மானுவல் மிராண்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மார்க் ரஃபலோ எழுதிய உருக்கமான கடிதத்தில், அன்புள்ள லேரி கிராமர், இந்த உலகம் ஒரு உன்னத கலைஞனையும் எழுத்தாளனையும் இழந்து தவிக்கிறது. உங்களுடன் பணியாற்றிய நாட்களை என்றுமே மறக்கமாட்டேன். என்னை போலவே இந்த உலகமும் உங்களை இழந்து வாடுகிறது" என எழுதி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    1969ம் ஆண்டு லேரி கிராமர் எழுதிய 'Women In Love' நாடகத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார் இந்த மாபெரும் எழுத்தாளர்.

    Read more about: hollywood dead மரணம்
    English summary
    Oscar-nominated screenwriter Larry Kramer, who also courted fame as a playwright, author, and gay rights and AIDS activist, has died. He was 84.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X