»   »  மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்

மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ஹெர்ட் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1990களில் வெளியான ஹோம் அலோன் மற்றும் ஹோம் அலோன் 2 படங்களில் மெக்காலே கல்கினுக்கு அப்பாவாக நடித்தவர் ஜான் ஹெர்ட்(72). அவர் ஹாலிவுட் படங்கள் தவிர டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Home alone actor found dead

அவரது மகன் மேக்ஸ் ஹெர்ட்(22) கடந்த டிசம்பர் மாதம் தூக்கத்திலேயே உயிர் இழந்தார். இந்நிலையில் மகன் இறந்து 6 மாதம் கழித்து ஜான் ஹெர்ட் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பாலோ ஆல்டோவில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர் ஹோட்டலில் தங்கி வந்தார். இந்நிலையில் அவர் இறந்து கிடந்ததை பணிப்பெண் ஒருவர் பார்த்துவிட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
John Heard, the actor who played Macaulay Culkin's father in "Home Alone", has died. He was 72. He was found dead in a hotel in Palo Alto, California by a maid service.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil