கிரேக்க கடவுள் ஜீயஸ் லுக்கில் மிரட்டும் அர்னால்டு.. அடுத்த மாதம் படமே வருதாம்.. உண்மை என்ன?
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புதிய படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகப் போவதாக போஸ்டர் போட்டு அறிவித்து இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
கிரேக்க கடவுளான ஜீயஸ் எனும் டைட்டிலில் உருவாகி உள்ள படத்தில் தான் ஜீயஸ் ஆக நடித்துள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அர்னால்டு ஷேர் செய்துள்ளார்.
ஆனால், இந்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரை இல்லாத நிலையில், திடீரென அடுத்த மாதம் படம் வருவதாக அர்னால்டு அறிவித்ததன் பின்னணியை ஹாலிவுட் பிரபலங்கள் அலசி வருகின்றனர்.

ஜிம் பிரியர்களின் டெமி காட்
இப்போதும் கூட நம்ம ஊர் இளைஞர்கள் ஜிம்முக்கு போவதே அர்னால்டு போல உடம்பை ஏற்ற வேண்டும் என்று தான் சொல்லி வருகின்றனர். அந்த அளவுக்கு பாடிபில்டிங் ரசிகர்களின் பிரியரான அர்னால்டு ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்கள் படத்தில் அட்டகாசமான கதாபாத்திரங்களில் நடித்து உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ளார்.

எந்திரனுக்கு எஜமான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், 2.0 போன்ற படங்களுக்கு எஜமானே அர்னால்டு நடித்த டெர்மினேட்டர் படங்கள் தான். 2.0 படத்தில் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக அர்னால்டை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவே ஷங்கர் முயற்சி செய்தார் என்றும் ஆனால், பட்ஜெட் ஒத்துவரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

ஹெர்குலஸாக
1970ம் ஆண்டு ஹெர்குலஸ் இன் நியூயார்க் படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் அர்னால்டு. கிரேக்க கடவுளான ஹெர்குலஸின் தந்தை தான் ஜீயஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜீயஸ் படத்தின் நடிப்பதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அர்னால்டு வெளியிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜீயஸாக நடிக்கிறாரா அர்னால்டு?
ஆனால், இதுவரை நடிகர் அர்னால்டு ஜீயஸ் படத்தில் நடிப்பதாக எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், எப்படி ஜீயஸ் ஆக அர்னால்டு நடிப்பார் என்றும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிப்ரவரியில் வெளியீடு என்பதை தாண்டி எந்த தயாரிப்பு நிறுவனம், யார் இயக்குகிறார் என எந்தவொரு தகவலும் இல்லை.

பிராங்க் செய்கிறாரா
ரசிகர் ஒருவர் வடிவமைத்து தனக்கு அனுப்பிய போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அர்னால்டு ஷேர் செய்துள்ளார் என்றும் இதுவொரு பிராங்க் தான் என்றும் ஹாலிவுட் பிரபலங்கள் கணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக அர்னால்டு இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











