»   »  இவரைப் பார்த்தா ‘பாண்ட்’ மாதிரியே தெரியலையே...

இவரைப் பார்த்தா ‘பாண்ட்’ மாதிரியே தெரியலையே...

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: டேணியல் கிரேக்கின் சகாப்தம் முடிந்தது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் இவர்தான் என்று பேச்சுக்கள் கிளம்பி விட்டன. ஆனால் அடுத்த பாண்ட் நடிகர் என்று கூறப்படும் டேமியன் லூயிஸைப் பார்த்தால் இவரா ஜேம்ஸ் பாண்ட் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

காரணம், இவரைப் பார்த்தால் அந்த பாண்டு மிடுக்கு சுத்தமாக இல்லை. மேலும் முகத்தைப் பார்த்தால் பாண்ட் போலவே இல்லை. வெகு சாதாரண முகமாகே உள்ளது டேமியின் லூயிஸின் முகம்.

பாண்ட் நடிகர்களுக்கு என்று ஒரு தனி முகவெட்டு உண்டு. முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் முதல் பியர்ஸ் பிராஸ்னன் வரை இதைப் பார்க்கலாம். ஆனால் டேணியல் கிரேக்கின் முகம் மட்டும்தான் இதில் விதிவிலக்கு.

கிரேக்...

கிரேக்...

கிரேக்கை இன்றும் கூட பலர் இவர் ஜேம்ஸ் பாண்ட்டே அல்ல என்று அடித்துக் கூறுவார்கள். காரணம், மக்கள் பார்த்துப் பழகிய ஜேம்ஸ் பாண்ட் முக வெட்டு இவருக்கு இல்லை என்பதால்.

எப்படி சாத்தியம்..?

எப்படி சாத்தியம்..?

இந்த நிலையில் இதுவரை இருந்த பாண்ட் நடிகர்களின் ஒரு சாயல் கூட இல்லாத டேமியன் எப்படி பாண்ட் ஆக உருமாறப் போகிறார் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

பின்னடைவு...

பின்னடைவு...

பாண்ட் நடிகர்களின் கண்கள், மூக்கு, முக வசீகரம், உருவ அமைப்பு என எதுவுமே லூயிஸுக்குப் பொருந்திப் போகவில்லை. இது மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சூதாட்டம்...

சூதாட்டம்...

இந்த நிலையில் லூயிஸ் உள்ளிட்டோரை வைத்து ஒரு சூதாட்டமும் களை கட்டியுள்ளதாம். பாண்ட் வேடத்தில் அடுத்த நடிகருக்கான போட்டியில் லூயிஸ் தவிர இத்ரிஸ் எல்பா, டாம் ஹார்டி, ஹென்றி கேவில், மிக்கல் பாஸ்பெண்டர் ஆகியோரும் உள்ளனர்.

ரசிகர்கள் கருத்து...

ரசிகர்கள் கருத்து...

இவர் 'பாண்டி' இல்லை 'பாஸ்கர்' என்று கூறாத அளவுக்கு அடுத்த பாண்ட் வந்தால் நல்லது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

English summary
Rumor has it Daniel Craig will no longer be our man of mystery but that Homeland star Damian Lewis might just be our next James Bond.
Please Wait while comments are loading...