»   »  கபாலியுடன் களமிறங்கிய ஜாக்கிசானின் ஸ்கிப் டிராஷ் ரூ. 1000 கோடி வசூல்

கபாலியுடன் களமிறங்கிய ஜாக்கிசானின் ஸ்கிப் டிராஷ் ரூ. 1000 கோடி வசூல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அதிரடி மன்னன் ஜாக்கிசான் நடித்துள்ள படம் ஸ்கிப் டிராஷ் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபாலி ரிலீஸான நாளில் சீனாவில் ஜாக்கிசான் நடித்த ஸ்கிப் டிராஷ் படம் ரிலீஸ் ஆனது. உலக சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் இழுத்து வைத்திருப்பவருமான அதிரடி மன்னன் ஜாக்கிசான்.

இந்திய மற்றும் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 2ம் தேதியன்று வெளியாகிறது.

ஜாக்கிசான்

ஜாக்கிசான்

கடந்த நான்கு ஆண்டுகளாக மிகப்பெரிய வெற்றியை தராமல் இருந்த ஜாக்கிசானுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது ஸ்கிப் டிராஷ். கபாலி வெளியான அதே தேதியில் வெளியான ஸ்கிப் டிராஷ் (Skiptrace) வசூலில் சாதனை படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

சீனாவில் மட்டுமே வெளியான முதல் நாளில் ரூ.420 கோடி வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. அதுவும் சீனாவில் மட்டுமே.

இப்படத்தை இயக்கியவர் டை ஹார்ட், கிளிப் ஆங்கர் போன்ற சாதனைப் படங்களை இயக்கிய ரென்னி ஹார்லின் என்பதும் இப்படத்தின் வசூல் சாதனைக்கு மற்றொரு காரணம். பிங் பிங் பென், ஜானி கினாக்ஸ்வில்லே ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கும் பிற நட்சத்திரங்கள்.

வில்லன் நடிகருக்கு லக்

வில்லன் நடிகருக்கு லக்

இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் வின்ஸ்டன் சாவவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட். ஏனெனில் கபாலியின் மெயின் வில்லன். ஒரே நாளில் ஜாக்கிசான், ரஜினி படங்களின் மூலம் உலகப் பிரசித்தம் அடைந்து விட்டார்.

உலகம் முழுவதும் ரிலீஸ்

உலகம் முழுவதும் ரிலீஸ்

இந்திய மற்றும் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 2ம் தேதியன்று வெளியாகிறது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இந்தப் படம் தமிழில் "இரு கில்லாடிகள்" என்ற பெயரில் வெளியாகிறது.

இந்தியாவில் ரிலீஸ்

நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர் தான் இரு கில்லாடிகள் படத்தையும் விநியோகம் செய்யவுள்ளது. 300 தியேட்டர்களுக்கு மேல் வெளியிட திட்டமிட்டுள்ளார் விஸ்வாஸ் சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jackie Chan's comedy action "Skiptrace" to take the top spot at the Chinese box office over the weekend.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos