»   »  மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் ஜாக்கிசான்!

மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் ஜாக்கிசான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாங்காங்: ஆக்ஷன் கிங் என்ற பெயருக்குச் சொந்தக்காரர் நடிகர் ஜாக்கிசான். இவர் நடித்துள்ள 'தி ஃபாரீனர்' படம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜாக்கிசான், 'Ai Qing Lao Le' (Love Is Getting Old) எனத் தொடங்கும் ஒரு புதிய பாடலை வெளியிட இருக்கிறாராம், அதுவும் அவரே அதை பாடியும் உள்ளாராம். இதுவரை 12 பாடல் ஆல்பங்களுக்குப் பாடியுள்ள ஜாக்கிசான் இந்த முறை ஸ்பெஷலாக பாடியிருக்கிறார்.

 Jackie Chan will give surprise to his wife

அதாவது ஜாக்கிசான் தன்னுடைய மனைவி Joan Lin Feng Jiao-வுக்காக ஒரு புதிய பாடலை உருவாக்கியிருக்கிறாராம். தற்போது அந்தப் பாடலின் படப்பிடிப்பு வேலைகள் தைவானில் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Jackie Chan will give surprise to his wife

ஜாக்கிசானின் மனைவி ஜோன் லின் 70,80-களில் தைவானின் பிரபலமான நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1982-ல் இவரை ஜாக்கிசான் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜேஸி எனும் மகன் இருக்கிறார்.

English summary
Jackie chan has created a new song for his wife Joan Lin Feng Jiao. The shooting of the song is currently going on in Taiwan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos