twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரையா, இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?: குமுறும் தாய்

    By Siva
    |

    லண்டன்: டீடெய்ன்மென்ட் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை பார்த்து இங்கிலாந்தை சேர்ந்த பெண் அதிருப்தி அடைந்துள்ளார்.

    இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் பல்ஜர் என்கிற 2 வயது குழந்தையை 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடத்தி கொலை செய்தனர். 1993ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து டீடெய்ன்மென்ட் என்கிற பெயரில் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    ஜேம்ஸை கொலை செய்த ராபர்ட் தாம்ப்சன் மற்றும் ஜான் வெனபில்ஸ் ஆகியோர் பற்றிய இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    ஆஸ்கர்

    ஆஸ்கர்

    அயர்லாந்தை சேர்ந்த வின்சென்ட் லாம்ப் இயக்கிய டீடெய்ன்மென்ட் படம் ஆஸ்கர் விருதுக்கு Best Live Action Short பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 30 நிமிடங்கள் ஓடும் இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை அறிந்து ஜேம்ஸின் தாய் டெனிஸ் ஃபெர்கஸ் எரிச்சல் அடைந்துள்ளார்.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    டீடெய்ன்மென்ட் (Detainment) படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்தால் அதை ஏற்கக் கூடாது என்று கூறி 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்து அதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இருப்பினும் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தாய்

    தன் மகன் கொடூரமாக கொலை செய்தது குறித்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை பார்த்து கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ளதாக ஜேம்ஸின் தாய் டெனிஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ஆஸ்கர் விருதை வெல்லாது என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

    அதிபர்

    டெனிஸ் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் டீடெய்ன்மென்ட் குழுவிற்கு அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

    English summary
    James Bulger's mother Denise said that it is disgusted to see Detainment getting Oscar nominations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X