twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் திடீர் பலி... திரையுலகம் அதிர்ச்சி

    By
    |

    சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல காமெடி நடிகர், உயிரிழந்தார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Recommended Video

    யாரும் வெளியே வராதீங்க! கண் கலங்கிய வடிவேலு

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    கொரோனால் பாதிப்பு... சினிமா தொழிலாளர்களுக்கு உதவி... பாலிவுட் சூப்பர் ஸ்டாரை பாராட்டும் ரசிகர்கள்!கொரோனால் பாதிப்பு... சினிமா தொழிலாளர்களுக்கு உதவி... பாலிவுட் சூப்பர் ஸ்டாரை பாராட்டும் ரசிகர்கள்!

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஹாலிவுட் நடிகர்

    ஹாலிவுட் நடிகர்

    இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக, அவர்கள் ஆஸ்திரேலியா சென்றிருந்த நிலையில் கொரோனா பாதித்தது. பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்குத் திரும்பினர்.

    ஓல்கா குரிலென்கோ

    ஓல்கா குரிலென்கோ

    ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ (Olga Kurylenko)வையும் விட்டு வைக்கவில்லை. இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருந்த அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தான் குணமாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

    மார்க் ப்ளம் மரணம்

    மார்க் ப்ளம் மரணம்

    இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் (Mark-blum) கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் உயிரிழந்தார். இவர், ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ், க்ரொக்கடைல் டண்டி, பிளசண்ட் டே, லவ்சிக், தி பிரசிடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மார்க் ப்ளம் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்ப நண்பருமான லீ வில்காஃப் தெரிவித்தார்.

    காமெடி நடிகர்

    காமெடி நடிகர்

    இப்போது பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 70. ஜப்பானில் அனைவருக்கும் தெரிந்த முகமான இவர், காமெடியில் கொடி கட்டி பறந்தவர். இப்போதும் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். கடந்த 23 ஆம் தேதி, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, டோக்கியோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ரசிகர்கள் சோகம்

    ரசிகர்கள் சோகம்

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஜப்பானிய திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஷிமுராவின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் புதிய படத்தின் ஷூட்டிங்கை, அவர் தொடங்க இருந்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Veteran Japanese comic Ken Shimura, who tested positive for the novel coronavirus last week, has died at the age of 70.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X