»   »  கையை பிடித்து இழுத்த தயாரிப்பாளர், முகத்தில் ஓங்கி குத்திய நடிகர்: பார்ட்டியில் பரபரப்பு

கையை பிடித்து இழுத்த தயாரிப்பாளர், முகத்தில் ஓங்கி குத்திய நடிகர்: பார்ட்டியில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: கோல்டன் குளோப்ஸ் பார்ட்டியின்போது தயாரிப்பாளர் வெயின்ஸ்டீனின் முகத்தில் குத்தியதாக ஹாலிவுட் நடிகர் ஜேசன் ப்ரீஸ்ட்லி தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் குவிகின்றன. பல நடிககைளை வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் ஹோட்டல் அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் வெயின்ஸ்டீன்.

Jason Priestley punched Harvey Weinstein

ஒரு சில நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் வெயின்ஸ்டீன் பற்றி ஹாலிவுட் நடிகர் ஜேசன் ப்ரீஸ்ட்லி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

1995ம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப்ஸ் பார்ட்டியின்போது ஹார்வி என்னை அங்கிருந்து கிளம்பச் சொன்னார். நான் கிளம்பிய போது அவர் என் கையை பிடித்து எங்கே போகிறாய் என்று கேட்டார்.

Jason Priestley punched Harvey Weinstein

நீங்கள் தானே கிளம்பச் சொன்னீர்கள் என்றேன். உடனே என்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நாம் ஏன் வெளியே சென்று பேசக் கூடாது என்றார். உங்களுடன் நான் எங்கும் வர மாட்டேன் என்று கூறி என் வலது கையால் அவர் முகத்தில் ஓங்கி குத்தினேன்.

உடனே பாதுகாவலர்கள் ஓடி வந்து என்னை வெளியே அனுப்பிவிட்டனர் என்றார்.

English summary
Actor Jason Priestley says he punched disgraced producer Harvey Weinstein on the face during a Golden Globes party in 1995. The 'Beverly Hills' actor recounted the incident on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X