»   »  "உலகின் அழகுப் பெண்மணி” ஜெனிபர் அனிஸ்டன்- சொல்கிறது பீப்பிள் பத்திரிக்கை!

"உலகின் அழகுப் பெண்மணி” ஜெனிபர் அனிஸ்டன்- சொல்கிறது பீப்பிள் பத்திரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் அனிஸ்டன் 2016 ஆம் ஆண்டிற்கான உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகலவிலான "பீப்பிள்" பத்திரிக்கை இந்த முடிவினை வெளியிட்டுள்ளது. ஜெனிபர் அனிஸ்டன் தன் அழகைப் பாதுகாக்க மட்டும் ஆண்டுக்கு ரூபாய் 72 லட்சம் செலவழிக்கிறாராம்.

Jennifer Aniston crowned World's Most Beautiful Woman 2016

43 வயதாகும் ஜெனிபர் அனிஸ்டன் இப்போதும் கூட ரசிகர்களின் விருப்ப நாயகியாக உலா வருகிறார். இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

ஜெனிபர் அழகு மருத்துவத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூபாய் 72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறாராம். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூபாய் 20 ஆயிரம் ஒதுக்குகிறார். யோகா பயிற்சிக்கு ரூபாய் 48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூபாய் 46 ஆயிரமும் செலவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jennifer Aniston has been crowned the World's Most Beautiful Woman by People magazine.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil