»   »  ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் மனைவியை பிரிய காரணம் ஜெனிபர் லோபஸா?

ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் மனைவியை பிரிய காரணம் ஜெனிபர் லோபஸா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக்கும், அவரது காதல் மனைவியும், நடிகையுமான ஜெனிபர் கார்னரும் விவாகரத்து செய்வதற்கு நடிகை ஜெனிபர் லோபஸ் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் நடிகை ஜெனிபர் கார்னரை காதலித்து 2005ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் அன்பின் அடையாளமாக 3 குழந்தைகள் பிறந்தனர்.

இந்நிலையில் தான் அப்லெக் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து

விவாகரத்து

ஜெனிபர் கார்னரும், அப்லெக்கும் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி 10வது திருமண நாளை கொண்டாடினர். திருமண நாளை கொண்டாடிய கையோடு இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

பென் அப்லெக்கும், ஜெனிபர் கார்னரும் விவாகரத்து பெற பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கார்னரை திருமணம் செய்யும் முன்பு அப்லெக் லோபஸ்ஸை தான் காதலித்து திருமணம் கூட நிச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

லோபஸ்

லோபஸ்

அப்லெக்கை பிரிந்த ஜெனிபர் லோபஸ் நடிகர் மார்க் ஆண்டனியை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்க்கும், லோபஸ்ஸும் விவாகரத்து பெற்றனர்.

காஸ்பர்

காஸ்பர்

கணவரை பிரிந்த 45 வயதாகும் ஜெனிபர் லோபஸ் 28 வயதே ஆன காஸ்பர் ஸ்மார்ட் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் லோபஸ் அப்லெக்குடன் சேர்ந்துவிட்டதாக வேறு பேசப்படுகிறது.

English summary
Buzz is that actress-cum singer Jennifer Lopez is the reason behind her former boyfriend Ben Affleck and Jennifer Garner's divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil