»   »  இந்த டி சர்ட் வேண்டாம்.. போன வாரமே போட்டாச்சு.. "டேட்டாபேஸ்" வைத்து டிரஸ் போடும் லோபஸ்

இந்த டி சர்ட் வேண்டாம்.. போன வாரமே போட்டாச்சு.. "டேட்டாபேஸ்" வைத்து டிரஸ் போடும் லோபஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாப் பாடகி, நடிகை, ஜெனீபர் லோபஸ் புதிதாக ஒரு உத்தியைக் கையாளுகிறார். அதாவது தான் அணியும் டிரஸ்கள் குறித்து ஒரு டேட்டாபேஸை அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் போட்ட டிரஸ்ஸை மறுபடியும் போட்டு மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாவதை அவரால் தடுக்க முடிகிறதாம்.

இந்த "டெக்னிக்கல் வார்ட்ரோப்" ஜெனீபர் லோபஸுக்கு பல விதங்களிலும் டென்ஷனைக் குறைப்பதாக அமைந்துள்ளதாம்.

46 வயதான ஜெனீபர் லோபஸ் வைத்துள்ள இந்த டேட்டாபேஸில் அவர் அணியும் டிரஸ், அந்த டிரஸ்ஸை எப்போது அணிந்தார் என்பது உள்ளிட்ட விவரங்கள் பதிவாகி விடுகிறதாம்.

ஷூ முதல் டிரஸ் வரை

ஷூ முதல் டிரஸ் வரை

டிரஸ் மட்டுமல்லாமல் அவர் போடும் ஷூ முதற்கொண்டு அனைத்தும் டேட்டாபேஸில் பதிவாகி விடுமாம். இதனால் ஏற்கனவே போட்டதை மறுபடியும் போடும் நிலை வருவதில்லையாம்.

புகைப்படத்துடன்

புகைப்படத்துடன்

இந்த டேட்டா பேஸில், ஜெனீபர் அணியும் டிரஸ், ஷூ, உள்ளாடை ஆகியவற்றின் புகைப்படமும் இடம் பெறுகிறது. அதன் அளவு, நிறம், அணிந்த தேதி உள்ளிட்ட விவரங்களும் பதிவாகி விடுகிறதாம்.

எந்த ஊரில் போட்ட டிரஸ்

எந்த ஊரில் போட்ட டிரஸ்

மேலும் எந்த ஊரில், எந்த நேரத்தில், எந்த நிகழ்ச்சியில் போட்ட டிரஸ் என்ற விவரமும் டேட்டாபேஸில் பதிவாகி விடுகிறதாம்.

அந்த வீட்டில் என்ன உள்ளது

அந்த வீட்டில் என்ன உள்ளது

அது மட்டுமல்லாமல் நியூயார்க்கில் உள்ள வீட்டில் என்னென்ன டிரஸ் இருப்பில் உள்ளது, லாஸ் ஏஞ்சலெஸ் வீட்டில் என்ன டிரஸ் உள்ளது என்ற ஸ்டாக் லிஸ்ட்டும் இதில் உள்ளதாம்.

இதைப் பார்த்துக்க ஒரு ஸ்டாப் வேற

இதைப் பார்த்துக்க ஒரு ஸ்டாப் வேற

இந்த டேட்டா பேஸை சரியாக பராமரித்து குழப்பம் இல்லாமல் தனக்கு உதவுவதற்காக ஒரு ஆளையும் புல் டைம் வேலையில் சேர்த்து சம்பளமும் கொடுத்து வருகிறாராம் ஜெனீபர்.

English summary
Singer-actress Jennifer Lopez reportedly has a high-tech system to remember everything she wears so she does not repeat her outfits. Lopez, 46, uses a database to help her pick her outfits, reported the New York Daily News.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil