'ஜோக்கர் 2'ரிலீஸ் தேதி அறிவிப்பு...செம குஷியான ரசிகர்கள்

சென்னை : ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'ஜோக்கர்'. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 70 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி ஒரு பில்லியனுக்கும் அதிகமான வசூலை குவித்தது.

இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 Joaquin Phoenixs Joker 2 set to release in 2024

'ஜோக்கர் 2' படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி 'ஜோக்கர் 2' படம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜோக்கர் படத்தை ரசித்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் இன்னும் இரண்டு வருடங்களுக்கும் மேல் இந்த படத்திற்காக காத்திருக்க வேண்டுமா என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

முதல் பாகத்தில் நடித்த Joaquin Phoenix உள்பட பெரும்பாலானோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் முதல் பாகத்தில் நடித்த நாயகன் Joaquin Phoenix சம்பளமாக 4.5 மில்லியன் டாலர்கள் பெற்ற நிலையில் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், இரண்டாம் பாகத்திற்கு 20 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் லேடி காகாவும் முக்கிய ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. Harley Quinn கேரக்டரில் தான் Lady Gaga நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. Joaquin Phoenix, ஜோக்கர் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே ஆஸ்கர் விருதினை வென்றுள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் ஜோக்கர் முக்கியமான படமாக கருதப்படுகிறது.

Todd Phillips இயக்கிய முதல் படமான ஜோக்கர் படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. தற்போது இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருவதால் இந்த படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜோக்கர் 2 படம் 2024 ம் ஆண்டு அக்டோபர் 4 ம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டுள்ள நிலையில், Marvel's Fantastic Four படமும் அதே மாதத்தின் இறுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்களின் மகிழ்ச்சி இரு மடங்காகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X