Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
Johnny Depp: ஒரு மணி நேரத்தில் ரூ. 28 கோடி சம்பாதித்த ஜானி டெப்.. அவருக்குள்ள இப்படியொரு திறமையா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையில் வெற்றிப் பெற்ற ஜானி டெப், தற்போது வெறும் ஒரு மணி நேரத்தில் 28 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் ஜேக்ஸ் பேரோவாக நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ஜானி டெப்.
ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட்டுக்கும் இடையே ஏற்பட்ட வழக்கு மோதல்கள் காரணமாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனின் அடுத்த பாகத்திலேயே அவர்
2,300
கோடி
கொடுத்தாலும்
உங்க
சகவாசமே
வேண்டாம்..
டிஸ்னிக்கு
நோ
சொன்ன
'மானஸ்தன்’
ஜானி
டெப்!

மனைவிக்கு எதிரான வழக்கு
ஜானி டெப் ஒரு மோசமான பெண் பித்தர் என இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். அந்த வழக்கு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் ஜானி டெப்புக்கு சாதகமாகவும் ஆம்பர் ஹெர்ட்டுக்கு பாதகமாகவும் தீர்ப்பு வந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்த்யது.

காசு இல்லை
சுமார் 10 மில்லியன் டாலர்கள் அபராதமாக ஜானி டெப்புக்கு அவரது மனைவி ஆம்பர் ஹெர்ட் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்ட நிலையில், தன்னிடம் அந்த அளவுக்கு பணமே இல்லை என சமீபத்தில் புலம்பித் தள்ளி இருக்கிறார் ஆம்பர் ஹெர்ட். அதே சமயம் வழக்கின் மூலம் தன்னுடைய வாழ்க்கை திரும்பவும் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியடைந்த ஜானி டெப் தொடர்ந்து அந்த வெற்றியை பெரியளவில் கொண்டாடி வருகிறார்.

ஒரு மணி நேரத்தில் 28 கோடி
இந்நிலையில், சமீபத்தில் தனது ஓவியங்களை இன்ஸ்டாகிராமில் விற்பனைக்கு கொண்டு வர ஒரு மணி நேரத்தில் 3 மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்துள்ளார் ஜானி டெப். இந்திய மதிப்பில் 28 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கேஸ்ட்டல் ஃபைன் ஆர்ட்ஸ் 37 கேலரியின் 780 பிரின்டுகளை வாங்க கூட்டம் அலைமோதிய நிலையில், ஒரே மணி நேரத்தில் இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளார்.

பிரபலங்களின் ஓவியம்
59வயதாகும் ஜானி டெப் தனக்கு இருக்கும் ஓவியத் திறமையை இப்போது தான் இந்த அளவுக்கு வெளிப்படுத்தி உள்ளார். ஹாலிவுட் நடிகர் அல்பசினோ, பாப் சிங்கர் பாபி டைலான் உள்ளிட்டோரின் உருவப் படங்கள் அடங்கிய ஓவியத்தைத் தான் அவர் வரைந்துள்ளார். ஒரு ஓவியத்தின் விலை 3,950 பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.